பிரபல ஐ.டி. நிறுவனம் அறிவித்துள்ள ஆட்குறைப்பு நடவடிக்கை… ஊழியர்கள் கடும் அதிர்ச்சி!

Photo: Accenture

உலக அளவில் நிலவும் பொருளாதார மந்தநிலை காரணமாக, அமேசான், ஃபேஸ்புக், மெட்டா, கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பன்னாட்டு ஐ.டி. நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், அந்த நிறுவனங்களை நம்பி உள்ள பிற நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஐ.டி. ஊழியர்கள் தங்களின் வேலை எப்போது வேண்டுமானாலும் பறிபோகும் என்பதால், கடும் அச்சத்தில் உள்ளனர்.

தொடர் விடுமுறை காரணமாக, உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

இந்த நிலையில், ஐ.டி. நிறுவனங்கள் பட்டியலில் முன்னணியில் உள்ள ‘Accenture’ நிறுவனத்தில் சுமார் 7.38 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 40% ஊழியர்கள் இந்தியர்கள் ஆவர். இந்த நிலையில், தனது நிறுவனத்தின் வருவாய் கணிப்பை வெளியிட்டுள்ள ‘Accenture’ நிறுவனம், செலவுகளைக் குறைக்கும் வகையில் 19,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

‘Accenture’ நிறுவனத்தின், ஆட்குறைப்பு நடவடிக்கையால் சுமார் 7,000 இந்திய ஊழியர்களின் வேலைப் பறிபோகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

போலீசிடம் நடக்காத ஒன்றை நடந்ததாக கூறி சிக்கிய பெண்

தற்போது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய வங்கிகளின் திவால் பிரச்சனை காரணமாக, ஐ.டி. நிறுவனங்களின் வர்த்தக வருமானம் பாதிக்கும் என்பது தான் முக்கிய பிரச்சனையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.