சிங்கப்பூரில் வெளிநாட்டவர்களுக்கு மிக உயரிய விருதை வழங்கி சிறப்பித்தார் அதிபர் ஹலிமா யாக்கோப்

Honorary Citizen Awards

சிங்கப்பூருக்காக விலைமதிப்பற்ற பங்களிப்பு மற்றும் மேம்பாட்டுக்கு உதவிய 2 பேருக்கு கௌரவ குடிமக்கள் விருதை சிங்கப்பூர் வழங்கியுள்ளது.

A*STAR இன் கௌரவ மூத்த உறுப்பினர் பேராசிரியர் சர் டேவிட் பிலிப் லேன் மற்றும் Swiss Re Ltd (Swiss Re) இன் கெளரவத் தலைவர் திரு வால்டர் பி. கீல்ஹோல்ஸ் ஆகியோருக்கு அந்த விருது வழங்கப்பட்டது.

சிங்கப்பூரில் லாரி மோதி ஊழியர் மரணம் – தொடரும் உயிரிழப்புகள்

இஸ்தானாவில் இன்று விழாவில், பேராசிரியர் லேன் மற்றும் திரு கீல்ஹோல்ஸ் ஆகியோருக்கு அதிபர் ஹலிமா யாக்கோப் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

பேராசிரியர் லேன், சிங்கப்பூருக்கு தொழில் சார்ந்த முதலீடுகளையும், திறன் பெற்ற வல்லுனர்களையும் ஈர்ப்பதில் முக்கிய பங்குவைத்துள்ளார்.

சிங்கப்பூர் நாணய வாரியத்தில் நீண்டகாலமாக பணியாற்றிவருபவர் திரு கீல்ஹோல்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் லேன் பிரிட்டிஷ் நாட்டவர் மற்றும் திரு கீல்ஹோல்ஸ் சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர். சிங்கப்பூரில் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது இது.

கடையில் திருட்டு வேலை… CCTV வீடியோவில் மாற்றிய ஊழியரை தேடிவரும் போலீஸ்