மருத்துவமனைகளில் கோவிட்-19 நோயாளிகளுக்கு இனி முழு வார்டுகள் ஒதுக்கீடு இல்லை

Pic: AFP/Roslan Rahman

இனி COVID-19 நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் தனியாக வார்டுகள் ஒதுக்கப்பட மாட்டாது என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ குங் குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் தடுப்பூசியை முழுமையாக போட்டுகொண்டுள்ளனர். ஆகையால் COVID-19 பாதிப்பு அவர்களுக்கு கடுமையாக இருக்க வாய்ப்புகள் குறைவு என திரு ஓங் கூறியுள்ளார்.

சிங்கப்பூருக்கு வரும் S pass வைத்திருப்பவர்கள் ஊருடன் ஒன்றி வாழ புதிய திட்டம்

கோவிட்-19 நோயாளிகளுக்கு மட்டும் வார்டுகளை ஒதுக்குவதை மருத்துவமனைகள் இனி நிறுத்தும், என்றார்.

COVID-19 கிருமி தொற்றுடன் வாழும் திட்டத்தக்கு ஏற்றார் போல மருத்துவமனை செயல்பாடுகள் மாற்றியமைக்கபட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அவசர சிகிச்சைப் பிரிவுகள் மீதான தற்போதைய அழுத்தம் நிலையானதாக இல்லை என்றும், அதற்கு தீர்வு தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவசர சிகிச்சைப் பிரிவு நோயாளிகளுக்கு கூடுதல் சுகாதார வசதிகளை சுகாதார அமைச்சகம் அமைக்கும் என்றும் கூறியுள்ளார்.

உச்ச தொற்று அலைகளின் போது சுமார் 160 படுக்கைகளையும், உச்சம் இல்லாத காலங்களில் 200 முதல் 300 படுக்கைகளையும் ஏற்படுத்த உள்ளதாக அவர் சொன்னார்.

பணப் பையை தொலைத்த ஓட்டுநர்: $300 வரை ரொக்கம், ஓட்டுநர் உரிமம் இருந்ததாக தகவல் – கண்டறிய உதவுங்கள்