தங்கும் விடுதியில் உள்ள ஊழியர்களின் கவனத்திற்கு! – தளர்வுகள் தங்கும் விடுதியில் வசிப்பவர்களுக்கு உண்டா?

migrant workers immigration-offenders
(Photo: Mothership)
சிங்கப்பூரில் வெளிநாட்டு தொழிலாளர்கள் வசிக்கும் தங்கும் விடுதிகளில் கோவிட்-19 வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக,அமலில் உள்ள சுகாதார கட்டுப்பாடுகள் தொடர்ந்து பரிசீலிக்கப்படும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 29-ஆம் தேதியிலிருந்து முகக்கவசம் கட்டாயம் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்படுவதைத் தொடர்ந்து துணைப்பிரதமரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.

சிங்கப்பூரில் தற்போது அமலில் இருக்கும் கட்டுப்பாடுகள் தங்கும் விடுதிகளில் வசிப்போருக்கு பரிசீலிக்கப்படுமா என்று செய்தியாளர் கேட்டபோது திரு.வோங் இவ்வாறு பதிலளித்தார்.

கூட்ட நெரிசல் ஏற்படாமல் தவிர்க்க வாரயிறுதிகளில் ஊழியர்கள் பொழுதுபோக்கு நிலையங்கள் உட்பட அவர்களது நேரத்தை செலவிட அதிக தெரிவுகள் வழங்கப்படுவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக தெரிவித்தார்.
பொது விடுமுறை நாட்களிலும்,ஞாயிற்றுக் கிழமைகளிலும் லிட்டில் இந்தியா,ஜூரோங் ஈஸ்ட்,கேலாங் சிராய்,சைனாடவுன் ஆகிய இடங்களுக்குச் செல்ல அனுமதி பெறும் திட்டம் கடந்த ஜூன் மாதம் 24-ஆம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது.