வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த வீட்டு வாடகை….செய்வதறியாது தவிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்!

Photo: Urban Redevelopment Authority, Singapore

சிங்கப்பூரில் தனியார் கட்டுமான நிறுவனங்கள், வீடுகள், உணவகங்கள், மால்கள் உள்ளிட்ட இடங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எனப்படும் வெளிநாட்டு ஊழியர்களே அதிகளவுப் பணிபுரிந்து வருகின்றனர். அதேபோல், சிங்கப்பூரில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களிலும் வெளிநாட்டு தொழிலாளர்கள் உயர் பதவி வகித்து வருகின்றனர்.

சிங்கப்பூர் அணிக்காக களமிறங்கும் இந்திய ஊழியர்கள்!

இந்த நிலையில், சிங்கப்பூரில் உள்ள வீடுகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சிங்கப்பூரின் நகர்ப்புற மறுவடிவமைப்பு ஆணையத்தின் தரவுகளின் படி, கடந்த 2022- ஆம் ஆண்டு அனைத்து தனியார் குடியிருப்பு சொத்துகளின் விலை ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் சுமார் 29.7 விழுக்காடு அதிகரித்துள்ளது. கடந்த 2007- ஆம் ஆண்டுக்கு பிறகு வீடுகளின் விலை இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது.

வீட்டின் மதிப்பு உயர்ந்துள்ளதன் காரணமாக, வரலாறு காணாத அளவுக்கு வீட்டின் வாடகையும் அதிகரித்துள்ளது. இதனால் சிங்கப்பூரில் தங்கிப் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல், வரும் காலங்களில் என்ன செய்வது என்று அறியாமல் ஊழியர்கள் தவித்து வருகின்றனர்.

குறிப்பாக, ஒரு வீட்டில் 5 பேர் தங்கி வந்த நிலையில், வாடகை உயர்வு காரணமாக அந்த வீட்டில் 10 பேர் தங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதேபோல், குடும்பத்துடன் தங்கிப் பணிபுரிந்த ஊழியர்கள், வாடகை உயர்வு காரணமாக, சிங்கப்பூரை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

“தமிழ் புத்தாண்டையொட்டி, இந்த நான்கு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்”- இந்து அறக்கட்டளை வாரியம் அறிவிப்பு!

உதாரணமாக, மாத சம்பளமாக 2,000 வெள்ளியை பெறும் ஒரு ஊழியர்கள், தனது வீட்டின் வாடகைக்கென்று சுமார் 50 விழுக்காடு தொகையைச் செலுத்த நேரிடுகிறது.

42 வயதான நபர் கடந்த எட்டு ஆண்டுகளாக ரிவர் வேலியில் (River Valley) உள்ள வாடகை வீட்டில் வசித்து வரும் நிலையில், மாதந்தோறும் 9,250 வெள்ளியை வாடகையாக செலுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வீட்டின் வாடகை சுமார் 13,200 ஆக அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளார்.

புக்கிட் திம்மாவில் (Bukit Timah) உள்ள வீடுகளின் வாடகை, கடந்த ஆண்டு 9,000 வெள்ளியில் இருந்து 15,000 வெள்ளியாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.