ட்விட்டர், மெட்டாவைத் தொடர்ந்து ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யும் HP நிறுவனம்!

Photo: HP Company Head Office in USA

உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக, தங்கள் செலவீனத்தைக் குறைக்க மென்பொருள் நிறுவனங்கள் எறைழைக்கப்படும் ஐடி நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

மதுரை, சிங்கப்பூர் இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை குறித்த விரிவான தகவல்!

குறிப்பாக, உலகின் மிகப்பெரிய நிறுவனங்களான அமேசான், கூகுள், மெட்டா, ட்விட்டர், மைரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களில் குறிப்பிட்ட சதவீத ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து வருகின்றனர். இது ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

இந்த நிலையில், கணினி தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக உள்ள HP நிறுவனம், விற்பனை குறைவு, பொருளாதார மந்தநிலை, தொழில் போட்டி உள்ளிட்ட காரணங்களால் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனத்தில் தற்போது வரை மொத்தம் 50,000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

125 கிலோ எடையை தூக்கி சாதனை படைத்த 63 வயதான அமைச்சர் க.சண்முகம்

இதில், சுமார் 10% முதல் 12% ஊழியர்களை 2025- ஆம் ஆண்டு நிதியாண்டுக்குள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். எண்ணிக்கை அடிப்படையில் 6,000 பேர் வரை பணி நீக்கம் செய்யப்படுவர் என்றும், ஊழியர்களின் பணி திறன் அடிப்படையில், நீக்கம் செய்யப்படுவர் என்றும் HP நிறுவனம் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய நிறுவனங்களின் நடவடிக்கையால், அதனைச் சார்ந்துள்ள நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.