திடீரென அடுக்குமாடியில் இருந்து சைக்கிளை வீசி எறிந்த ஆடவர் – நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

SPF

சிங்கப்பூரில் 23 வயதான சிங்கப்பூரர் ஒருவர், பொங்கோலில் உள்ள அடுக்குமாடி வீட்டில் இருந்து சைக்கிளை வீசியதாக நீதிமன்றத்தில் கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 18) குற்றஞ்சாட்டப்பட்டார்.

நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளது படி; ஏ. ஹரிந்தேயர் என்ற அந்த ஆடவர் இந்த மோசமான செயலைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.

100 ஆண்டுகளில் இல்லாத அளவு “கடும் வெள்ளம்” – மலேசியாவில் 5 பேர் பலி, 41,000 பேர் வெளியேற்றம்

Edgedale Plainsயில் உள்ள குடியிருப்பு பிளாக்கில் இருந்து சைக்கிள் வீசப்பட்டதாக பொதுமக்களிடமிருந்து புகாரைப் பெற்றதாக காவல்துறை இன்றைய செய்திக்குறிப்பில் தெரிவித்தது.

போலீஸ் கேமராக்களில் இருந்த படங்களின் உதவியுடன், அங் மோ கியோ போலீஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் ஆடவரை கைது செய்தனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை, S$2,500 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

அடுத்ததாக ஹரிந்தேயர் டிசம்பர் 31ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராவார்.

சிங்கப்பூர் உட்பட வெளிநாடுகளில் இருந்து ஈரோடு வந்த 183 பேர் – தீவிர கண்காணிப்பு