முறிந்து விழுந்த பெரிய மரம் – கார் உள்ளே சிக்கிக்கொண்ட பயணி

huge tree falls Passenger pinned PIE
SHIN MIN DAILY NEWS

தோ பாயா லோரோங் 2 இன் வெளியேறும் பகுதிக்கு அருகில், பான் தீவு அதிவிரைவுச்சாலையில் (PIE) பெரிய மரம் ஒன்று கார் மீது விழுந்தது.

இதில் கார் உள்ளே இருந்த பயணி ஒருவர் சிக்கிக்கொண்டார். இதனை அடுத்து இரண்டு பேர் அவரை மீட்டதாக சீன மொழி ஊடகமான ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் புதிய வேலை அனுமதி விண்ணப்பங்கள் – செப்டம்பர் 1 முதல் இது கட்டாயம்

இதில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்துள்ளது.

விரைவுச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் மரம் விழுந்ததை அடுத்து, சாங்கி நோக்கி செல்லும் நான்கு வழித் தடத்திலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக ஷின் மின் தெரிவித்துள்ளது.

எண் 5, 151 மற்றும் 154 ஆகிய மூன்று பேருந்து சேவைகளும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வழக்கமான வழித்தடங்களில் இருந்து வேறு வழியில் திருப்பி விடப்பட்டதாக SBS ட்ரான்சிட் நிறுவனம் கூறியுள்ளது.

பின்னர் காலை 8.10 மணியளவில் விழுந்த அந்த மரம் அகற்றப்பட்டது.

கடந்த மூன்று நாட்களில் முறிந்து விழுந்த இரண்டாவது பெரிய மரம் இதுவாகும்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சிங்கப்பூரில் இருந்து இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் ஊழியர்கள் கவனத்திற்கு – இத ஒருபோதும் செய்யாதீங்க