சிங்கப்பூர் முழுவதும் வெப்பநிலை குறைந்தது – தீவின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த காற்றுடன் மழையும் பெய்துள்ளது !

july 29 2022 weather

வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் சிங்கப்பூர் முழுவதும் வெப்பநிலை சில டிகிரி செல்சியஸ் சரிந்தது, தீவின் பெரும்பாலான பகுதிகள் பலத்த மழை மற்றும் பலத்த காற்றால் சூழப்பட்டது.

சிங்கப்பூரின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள Admiralty இல் நேற்று ரவு 7:30 மணிக்கு முன்னதாகவே வெப்பநிலை 22.9 டிகிரி செல்சியஸாகக் குறைந்ததாக சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த நேரத்தில் தீவின் குளிர்ச்சியான பகுதியாக அது இருந்தது குறிப்பிடத்தக்கது. தீவின் மையப் பகுதியான ஆங் மோ கியோவில் வெப்பநிலை 24.3°C ஆகஇருந்தது. அந்த நேரத்தில் Sembawang இல் இரவு 7:30 மணியளவில் 40 மிமீக்கு மேல் மழை பெய்திருந்தது.

தீவு முழுவதும் பலத்த காற்றும் உணரப்பட்டது. Mandai இல் 46.2 மிமீ மழைப்பொழிவுடன் வடக்கில் அதிக மழை பெய்தாலும் சிங்கப்பூரின் தெற்கிலும் பலத்த காற்று வீசியது.

Pasir Panjang இல் மாலை 5:50 க்கெல்லாம், மணிக்கு 60.6 கிமீ வேகத்தில் காற்று வீசியது.