மீண்டும் திறக்கப்பட்டது பிரபல ‘i12 Katong’ மால்!

Photo: @drv1n23 Instagram

சிங்கப்பூரில் ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டில் (East Coast Road) உள்ள பிரபல ‘i12 Katong’ மால், டிசம்பர் 23- ஆம் தேதி அன்று மீண்டும் திறக்கப்பட்டது.

தெம்பனீஸ் சந்திப்பில் 6 வாகனங்கள் விபத்து: ஒருவர் மரணம், 4 பேர் காயம் – (பதைபதைக்கும் விபத்து வீடியோ)

கடந்த 2020- ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த மால் சீரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்டது. இந்த நிலையில், தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ள இம்மாலில் ஆறு அடுக்குகள் மற்றும் இரண்டு கார் பார்க்கிங்களைக் கொண்டுள்ளது. இப்போது, இந்த மாலில் தோராயமாக 25 கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மற்ற கடைகள் விரைவில் திறக்கப்படும். இந்த தகவலை ‘i12 Katong’ தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

திறந்திருக்கும் விற்பனை கடைகளில் கோல்டன் வில்லேஜ் (Golden Village), ஒயின் இணைப்பு (Wine Connection), சிக்னேச்சர் KOI (Signature KOI), மலேசியா போலே (Malaysia Boleh), இப்புடோ ராமன் (Ippudo Ramen) மற்றும் லுலுலெமன் (Lululemon) ஆகியவை அடங்கும்.

இந்தியாவின் 75- வது சுதந்திர தின கொண்டாட்டம்: வினாடி- வினா போட்டியில் பங்கேற்க வெளிநாட்டு வாழ் இந்திய இளைஞர்களுக்கு அழைப்பு!

மாலில் மொத்தம் உள்ள சுமார் 180 கடைகள் வருகிற 2022- ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வரவிருப்பதால், மால் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

‘i12 Katong’ தொலைத்தொடர்பு நிறுவனமான M1 உடன் இணைந்து 5G இயக்கப்பட்ட நெட்வொர்க்கையும் கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.