தெம்பனீஸ் சந்திப்பில் 6 வாகனங்கள் விபத்து: ஒருவர் மரணம், 4 பேர் காயம் – (பதைபதைக்கும் விபத்து வீடியோ)

Tampines junction accident 1 dead, 4 injured

தெம்பனீஸ் அவென்யூ 10இல் நான்கு கார்கள், டாக்ஸி மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் 59 வயது ஆடவர் ஒருவர் வியாழக்கிழமை (டிசம்பர் 23) இரவு உயிரிழந்தார்.

சமூக ஊடகங்களில் பரவி வரும் அருகிலுள்ள வாகனத்தின் கேமரா காட்சிகள், வெள்ளை நிற கார் மீது சிவப்பு நிற கார் மோதுவதற்கு முன் தடை வேலியை உடைப்பதைக் காட்டியது.

வாடிக்கையாளர்களுக்கு 10 நாட்களில் S$140,000 இழப்பு – பொதுமக்களுக்கு OCBC வங்கி எச்சரிக்கை

Tampines Avenue 1 மற்றும் Tampines Avenue 10 சந்திப்பில் இரவு 11.10 மணியளவில் விபத்து ஏற்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) கூறியது.

அதில் ஒரு நபர் காரின் ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக் கொண்டார் என்றும், ஹைட்ராலிக் மீட்பு உபகரணங்களைப் பயன்படுத்தி அந்த நபரை SCDF மீட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய ஐந்து நபர்களை SCDF சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றது.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது ஓட்டுநர் ஒருவர் சுயநினைவின்றி இருந்ததாகவும், பின்னர் அவர் காயங்களினால் உயிரிழந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் 22 மற்றும் 38 வயதுக்குட்பட்ட நான்கு ஆண்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தனர்.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 33 வயது ஓட்டுனர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

பணிப்பெண்ணுடன் அறையில் ஒன்றாக இருந்த வெளிநாட்டு ஊழியர்: கையும் களவுமாக பிடித்த முதலாளி – போலீசில் புகார்