வாடிக்கையாளர்களுக்கு 10 நாட்களில் S$140,000 இழப்பு – பொதுமக்களுக்கு OCBC வங்கி எச்சரிக்கை

Photo: Wikipedia

SMS மூலம் ஆள்மாறாட்டம் செய்யும் மோசடிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளதாக OCBC வங்கி எச்சரித்துள்ளது.

கடந்த டிசம்பர் 8 முதல் 17 வரை 10 நாட்களில் 26 வாடிக்கையாளர்கள் இந்த மோசடிகளால் மொத்தம் S$140,000 பணத்தை இழந்துள்ளனர் என்று OCBC வங்கி தெரிவித்துள்ளது.

பணிப்பெண்ணுடன் அறையில் ஒன்றாக இருந்த வெளிநாட்டு ஊழியர்: கையும் களவுமாக பிடித்த முதலாளி – போலீசில் புகார்

இதுவரை, டிசம்பர் மாதத்தில் 45 மோசடி இணையதளங்களைக் கண்டறிந்து அதனை OCBC வங்கி அகற்றத் தொடங்கியுள்ளது, இது ஒவ்வொரு மாத சராசரியை விட எட்டு மடங்கு அதிகமாகும், என வங்கி கூறியது.

“இதில் பொதுமக்கள் தங்கள் வங்கிக் கணக்குகள் அல்லது கிரெடிட் கார்டுகளில் சிக்கல்கள் இருப்பதாகக் கூறி வங்கியில் இருந்து கேட்கப்படாத ஒரு போலியான SMSகளைப் பெற்றுள்ளனர்.”

வங்கித் தகவல் மற்றும் கடவுச்சொற்களை வாடிக்கையாளர்களிடம் கேட்கும் முறையான வங்கி இணையதளம் போல் மோசடி இணையதளத்திற்கான “லிங்க்” அந்த போலி SMSகளில் இருக்கும் என்றும் வங்கி தெரிவித்துள்ளது.

OCBC வங்கி, வாடிக்கையாளர்களுக்குக் கணக்கு மூடப்பட்டதைப் பற்றியோ அல்லது அவர்களின் கணக்குகள் தற்காலிகமாகப் தடைபட்டிருப்பதையோ தெரிவிக்க SMS அனுப்பாது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

போக்குவரத்துக்கு விதிகளுக்கு எதிராகச் சென்ற லாரி (வீடியோ): நெட்டிசன்கள் காட்டம் – சாலை விதிகளை மதிப்போம்!