சிறுநீர்ப் பரிசோதனையில் CNB-யிடம் சிக்கும் போதைப்புழங்கிகள்! – அப்படியே காட்டிக்கொடுக்கும் ‘அயன்ஸ்கேன்’ கருவி!

cnb officer -istockphoto

சிங்கப்பூரில் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து நவம்பர் மாதம் வரையிலான இடைப்பட்ட காலகட்டத்தில் போதைப்பொருள் பயன்படுத்திய சந்தேகத்தின் அடிப்படையில் 69 சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவுச் சோதனைச்சாவடிகளில் நடத்தப்படும் சோதனைகளில் போதைப்புழங்கிகள் பிடிபட்டதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.சென்ற ஆண்டை விட இந்தாண்டு அதிகம் என்று கூறப்படுகிறது.

சிங்கப்பூரைச் சேர்ந்த ஆறு போதை ஆசாமிகள் சாங்கி விமான நிலையத்திலும் மற்ற சோதனைச்சாவடிகளிலும் பிடிபட்டனர். 2020-இல் போதைப்பொருள் தொடர்பில் 30 பேர் கைதாகியுள்ளனர்.கொரோனா பரவலுக்கு முன்பு 2019ஆம் ஆண்டில்,சோதனைச்சாவடிகளில் போதைபுழங்கிய குற்றத்திற்காக 132 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

குடிவரவு சோதனைச்சாவடி ஆணையத்துடன் இணைந்து அவ்வப்போது சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக CNB மக்களுக்கு தெரிவித்தது.நவீன தொழில்நுட்ப கருவிகளின் உதவியுடன் போதைப்பொருள் கடத்தலை கண்டறிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஒருவர் சிறிய அளவு போதைப்பொருள் வைத்திருந்தாலும் ‘அயன்ஸ்கேன்’ கருவி மூலம் கண்டறிய முடியும்.போதைப்பொருள் உட்கொண்டவர்கள் சிறுநீர்ப் பரிசோதனையில் சிக்கினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.”சிங்கப்பூரின் போதைப்பொருள் சட்டங்களை அத்துமீறுவோர் மீது அமலாக்க நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டோம்” என்று CNB தெரிவித்தது.