லாரி மூலம் போதைப்பொருள் கடத்தல்: வளைத்து பிடித்த ICA – 24 வயது வெளிநாட்டு ஓட்டுநர் கைது

CNB & Google Maps

மலேசிய பதிவு பெற்ற லாரி மூலம் கடந்த டிசம்பர் 20 மதியம் சிங்கப்பூருக்கு 3.1 கிலோ கஞ்சா கடத்தும் முயற்சியை, குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் (ICA) அதிகாரிகள் முறியடித்தனர்.

அந்த லாரியில் கனமான மரம் மற்றும் AC உதிரிபாகங்களுடன் கலந்து சரக்குகளை எடுத்துச் சென்றதாக ICA செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

பணத்தை திருடியதாக பெட்ரோல் நிலையத்தில் பணிபுரிந்த ஊழியருக்கு சிறை

இதனை அடுத்து, மேலதிக சோதனைகளுக்காக அந்த லாரி கைப்பற்றப்பட்டது, ஆனால் அது ஏன் தனிமையில் வைக்கப்பட்டது என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை.

ஓட்டுநர் இருக்கைக்கு பின்னால், கருப்பு பிளாஸ்டிக் பை கொண்ட சுருக்கு பையை ICA அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதில் 3,113 கிராம் கஞ்சா இருந்ததாக நம்பப்படுகிறது.

அதன் பின்னர், 24 வயதான மலேசிய ஓட்டுநர் உடனடியாக கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு (CNB) பரிந்துரைக்கப்பட்டார்.

வயதான தந்தையை முகத்தில் அறைந்து, துண்டை வைத்து அடித்து துன்புறுத்திய மகனுக்கு சிறை