ஐஸ்க்ரீம் குச்சிகளைக் கொண்டு பாரதியார், திருவள்ளுவர் உருவப்படங்களை உருவாக்கி அசத்தல்!

Photo: Singapore book of records Official Facebook Page

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடந்த ஜனவரி 21- ஆம் தேதி அன்று பிற்பகல் 03.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை சிங்கப்பூரில் உள்ள தேக்கா பிளேசில் ‘எண்ணமும் வண்ணமும்’ என்ற நிகழ்ச்சியை ‘கலாமஞ்சரி’ சிங்கப்பூரில் ஏற்பாடு செய்திருந்தது. லிஷா (Lisha) அமைப்பின் ஆதரவோடு இந்த நிகழ்ச்சி நடந்தது.

சொந்த நிறுவனத்தைத் தொடங்கியுள்ள சிங்கப்பூர் இளைஞர்! – தொழிலுக்கு புத்துயிர் கொடுக்க முயல்வதாக பேச்சு…

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிங்கப்பூருக்கான இந்திய தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் டி.பிரபாகர் கலந்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில், மேற்பட்ட சிங்கப்பூர் வாழ் தமிழர்கள், லிஷா அமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

Photo: Singapore Book Of Records Official Facebook Page

மிருதங்கம், வயலின், கர்நாடக இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை இந்நிகழ்ச்சியில் இடம் பெற்றிருந்தது. அந்த வகையில், ரங்கோலி வல்லுனர்களான சிங்கப்பூரில் வசித்து வரும் சுதா ரவி மற்றும் அவரது மகள் ரஷிதா ரவி ஆகியோர் 25,000- க்கும் அதிகமான ஐஸ்கீரிம் குச்சிகளைக் கொண்டு 6 மீட்டர் அகலம், 6 மீட்டர் உயரத்துக்கு பாரதியார், பாரதிதாசன், அவ்வையார், திருவள்ளுவர் ஆகியோரின் உருவப்படங்களை உருவாக்கியுள்ளனர். இது சிங்கப்பூர் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் (Singapore Book Of Records) சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்கான சான்றிதழ்கள் சுதா ரவி மற்றும் ரஷிதா ரவி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

சீன புத்தாண்டை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் கொண்டாடிய ‘MWC’!

நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்களும் ஐஸ்க்ரீம் குச்சிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள தமிழறிஞர்களின் உருவப்படங்களைப் பார்த்து அவர்களுக்கு நன்றி தெரிவித்தோடு, புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.