ஒரே­யொரு ஏவு­க­ணை­யில் எல்­லாம் முடிந்­து­வி­டும் – சிங்கப்பூருக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் : அமைச்சர் சண்முகத்தின் கூல் பதில்!

Man tasered by police arrested after scuffle on Esplanade Drive
File Photo

இந்­தோ­னீ­சிய மத போத­கர் அப்­துல் சோமத் பத்­து­பாரா சிங்­கப்­பூர் அதி­கா­ரி­க­ளால் சில காலம் கண்­கா­ணிக்­கப்­பட்டு வந்­த­தாக சட்ட உள்­துறை அமைச்­சர் சண்­மு­கம் தெரி­வித்­துள்­ளார்.

இம்மாதம் 16ஆம் தேதி சிங்கப்பூருக்கு நுழைய முயன்ற அவருக்கு, அனுமதி மறுக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து, அதே நாளில் பாத்­தா­மிற்கு திருப்பி அனுப்­பப்­பட்­டார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஜகார்த்­ தா­வி­லுள்ள சிங்­கப்­பூர் தூத­ரக வளா­கத்­தி­லும் மேடா­னி­லுள்ள சிங்­கப்­பூர்த் துணைத் தூத­ர­கத்­தி­லும் ஆர்ப்­பாட்­டங்­கள் நடை­பெற்­றன.

சிங்­கப்­பூ­ரில் நுழைவு மறுக்­கப்­பட்­டது முதல் இணை­யத்­தில் இவ­ரது ஆத­ர­வா­ளர்­கள் பதி­வேற்­றிய கருத்­து­க­ளை­யும் அமைச்­சர் வெளிப்­ப­டுத்­தி­னார்.

சிங்­கப்­பூர் குண்டு வைத்­துத் தகர்த்­தப்­பட வேண்­டும் என்று அவ­ரது ஆத­ர­வா­ளர்­கள் கருத்­துத் தெரி­வித்­தி­ருந்­த­னர்.

2001ல் நியூயார்க்­கில் நிகழ்ந்த 9/11 தாக்­கு­த­லைப் போல உங்­கள் நாட்­டைத் தாக்­கு­வோம் என்று ஒரு கருத்து பதிவிடப்பட்டிருந்தது.

சிங்கப்பூர் சிறிய நாடு. ஒரே­யொரு ஏவு­க­ணை­யில் எல்­லாம் முடிந்­து­வி­டும், என்­றும் ஒரு கருத்து வெளி­யி­டப்­பட்­டது.

இதனை சுட்டிக்காட்டிய அமைச்சர், வி­ர­வாத, பிரி­வி­னை­வாத போத­னை­கள் பல இன, பல சமய சிங்­கப்­பூர் சமூ­கத்­திற்கு ஏற்­பு­டை­யவை அல்ல என்று தெரிவித்தார்.

இந்­தோ­னீசியா­வில் பிர­ப­ல­மான மதபோதகர் சோமத்தை, இன்ஸ்டகி­ரா­மில் 6.5 மில்­லி­யன் பேரும் யூடி­யூப்பில் 2.7 மில்­லி­யன் பேரும் ஃபேஸ்புக்­கில் 700,000 பேரும் பின்­பற்­று­கின்­ற­னர்.

யூடி­யூப் காணொளி வழி போத­னை­க­ளி­னால், தற்­கொ­லைத் தாக்­கு­தலை மேற்­கொள்­வது தன்னை சொர்க்­கத்­திற்கு இட்­டுச்­செல்­லும் என்­று சோமத் நம்­பி­யுள்­ளார்.