குவளை இல்லாமல் பால் அருந்திய வெளிநாட்டு ஊழியர்கள்; உடனடியாக 800 குவளைகள் மற்றும் தின்பண்டங்களை வழங்கிய IKEA..!

IKEA donates 800 mugs & snacks to migrant workers who were drinking milk from cartons
IKEA donates 800 mugs & snacks to migrant workers who were drinking milk from cartons (Photo: Itsrainingraincoats/Facebook)

Swedish பர்னிச்சர் சில்லறை விற்பனை நிறுவனமான IKEA, தங்கும் விடுதிகளில் உள்ள ஊழியர்களுக்கு சுமார் 800 குவளைகள் மற்றும் தின்பண்டங்களை வழங்கியுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் குவளைகள் இல்லாமல், அட்டைப்பெட்டியில் இருந்து நேரடியாக பால் அருந்துவதை கண்ட பிறகு இந்த அன்பளிப்புகள் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மொத்தம் 1,002 பேர் COVID-19 தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர் – MOH..!

இந்த தகவலை, Itsrainingraincoats பேஸ்புக் பக்கம் கடந்த ஏப்ரல் 24 அன்று பகிர்ந்துள்ளது.

அதாவது, நீண்டகால நன்கொடையாளர்களில் ஒருவர் கடந்த வாரத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு பால் அடங்கிய அட்டைப்பெட்டிகளை அனுப்பியிருந்தார்.

அதனை தொடர்ந்து, Itsrainingraincoats தன்னார்வலர்களில் ஒருவர் ஊழியர்கள் புகைப்படங்களைப் பார்த்தபோது, ​​அவர்கள் அதில் அட்டைப்பெட்டியில் இருந்து நேராக பால் அருந்துவதை கண்டார்.

(Photo: Itsrainingraincoats/Facebook)

இது பற்றி சில விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், ஊழியர்களிடம் குவளைகள் இல்லாததால் தான் அவர்கள் அட்டைப்பெட்டியில் இருந்து நேராக பால் அருந்துகின்றனர் என்பதை கண்டறிந்தார்.

இந்த தகவலை அறிந்ததும், நன்கொடை குழு உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, IKEA விரைவாக ஈடுபட்டு சுமார் 800 குவளைகள் மற்றும் தின்பண்டங்களை ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது.

Got milk? Yes. Got mugs? No!One of our long term supporting donors sent cartons of creamy milk to these workers last…

Posted by Itsrainingraincoats on Friday, April 24, 2020