சட்டவிரோத சூதாட்டச் செயல்களில் ஈடுபட்டதாக ஏழு பேரிடம் போலீசார் விசாரணை

illegal betting activities investigation
(Rep. Image)

சிங்கப்பூரில் சட்டவிரோத சூதாட்டச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஏழு பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கையைத் தொடர்ந்து அவர்கள் பிடிபட்டனர்.

இந்த சோதனை நடவடிக்கை கடந்த புதன்கிழமை அன்று யுஷூன் ஸ்ட்ரீட்1க்கு அருகே நடந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

உலு பாண்டன் சமூக மன்றத்துக்கு அருகே விழுந்த பெரிய மரம்; அடியில் சிக்கிய இருவர்

75 வயதான ஆடவர் ஒருவரும், 62 வயதான பெண்ணும் மற்ற நான்கு ஆண்களுக்கு சூதாட்ட சேவை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.

அதே போல 61 வயதுமிக்க இன்னொரு ஆடவர், மற்றொரு சூதாட்ட சேவை வழங்குனருடன் சட்டவிரோத பந்தய நடவடிக்கைகளில் ஈடுபட்டார் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதில் சுமார் S$2,280 ரொக்கம் மற்றும் ஏழு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சந்தேக நபர்கள் 325 பேரிடம் போலீசார் விசாரணை