ரோட்டில் தேவையற்ற பொருட்களை வீசிச்சென்ற நிறுவனத்தின் மேற்பார்வையாளருக்கு S$8,000 அபராதம்

illegal-dumping company supervisor fined
NEA

தேவையற்ற அலுவலக பர்னிச்சர் பொருட்களை லாரியில் ஏற்றிச்சென்று சட்டவிரோதமாக சாலை ஓரத்தில் வீசியெறிந்த நிறுவனத்தின் மேற்பார்வையாளருக்கு S$8,000 அபராதம் விதிக்கப்பட்டது.

Kheam Hock சாலையில் அவற்றை வீசியெறிந்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்ட பின்னர் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள் சிங்கப்பூர் ஊழியர்களுக்கு இந்த சம்பளம் கொடுக்கணும் – வந்தது புதிய தளம்

சியோவ் வெய் வென் என்ற மேற்பார்வையாளருக்கு சுற்றுச்சூழல் பொது சுகாதாரச் சட்டத்தின் 20(1)(a) பிரிவின் கீழ் தண்டனை வழங்கப்பட்டது,

கடந்த ஆண்டு ஜனவரி 30 அன்று, பீச் சாலையில் உள்ள அலுவலகத்தை காலி செய்து சுங்கே கடுட் டிரைவில் உள்ள வேறு இடத்திற்கு தேவையற்ற பர்னிச்சர் பொருட்களை அவர் கொண்டு சென்றுள்ளார்.

அப்போது, Kheam Hock சாலையில் உள்ள ஒதுக்குப்புறமான இடத்தில் அவர் பொருட்களை அப்புறப்படுத்தியதாக NEA தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் கழிவுகளை அகற்றுவது கடுமையான குற்றமாகும், ஏனெனில் அவ்வாறான கழிவுகள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி, பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று NEA கூறியது.

விபத்தில் 4 வயது சிறுமி மரணம்.. தேடப்பட்டு வந்த நபர் கைது