நிறுவனம் ஒன்றின் கணினியில் சட்டவிரோத ஊடுருவல்: வாடிக்கையாளர்களின் தகவல்கள் வெளியானது

(Photo: Nestia)

உள்­ளூர் அறை­க­லன் சில்­லறை வர்த்­தக நிறுவனமான ஹைவ் (Vhive) என்னும் நிறுவனத்தின் கணி­னி­யில் ஊடு­ரு­வப்­பட்டு வாடிக்­கை­யா­ளர்­க­ளிள் தக­வல்­கள் கசிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மின்­னஞ்­சல் முக­வரி, கைபேசி எண்கள் மற்றும் முகவரிகள் வெளியாகி உள்ளதாகவும் இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

டான்ஜோங் கடற்கரையில் ஆடவரை தாக்கிய திருக்கை மீன் – பொதுமக்கள் கவனம்

கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி தனது கணி­னித் தக­வல் சேமிப்பு முறை­யில் ஊடுருவல் இருப்பதாக ஹைவ் நிறுவனம் மார்ச் 29ஆம் தேதி தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்தது.

இதில் வாடிக்கையாளர்களின் பெயர்கள், முகவரிகள், மின்­னஞ்­சல் முக­வரி மற்றும் கைபேசி எண்கள் ஆகிய தகவல்கள் மட்டும் வெளியாகியுள்ள இந்த நிலையில் அவர்களின் நிதி சம்பந்தமான தக­வல்­கள் மற்றும் அடை­யாள எண்­கள் போன்றவை வெளிப்படவில்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆல்­டோஸ் என்னும் ஊடு­ரு­வல் குழு­மமானது நடந்துள்ள இந்த ஊடு­ரு­வ­லுக்குத் தானே பொறுப்பு என்று தெரிவித்துள்ளது, இது அதிகமாக தென்கிழக்கு ஆசியாவில் செயல்படுவதாக கூறப்பட்டுள்ளது.

ஹைவ் நிறுவனத்தின் கணினிக்குள் ஒன்­பது நாட்­களில் மூன்று முறை ஊடுருவியதாகவும் சுமார் 300,000க்கும் அதிகமான தக­வல்­களைத் திருடி விட்டதாகவும் அந்­தக் குழு­மம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து ஹைவ் நிறுவனம் மனப்­பூர்­வ­மாக வருத்­தம் தெரிவித்துள்ளதாகவும், பல பாது­காப்பு ஏற்­பா­டு­க­ளை செய்து வரு­வ­தாக ஹைவ் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உறுதி கூறியதாக கூறப்பட்டுள்ளது.

சென்ட்ரல் மால் அருகே சண்டையில் ஈடுபட்டதாக 11 பேர் கைது