தடுப்பூசி போட்டுகொண்டோர் சிறப்பு பயணத்தில் இதுவரை 5,100 பேர் வருகை – 5 பேருக்கு கோவிட்-19 பதிவு

Muhammad Hasbis/Pixabay

தடுப்பூசி போட்டுகொண்டோருக்கான (VTL) திட்டம் செப். 8-ஆம் தேதி தொடங்கியதில் இருந்து, அந்த திட்டத்தின்கீழ் 5,100-க்கும் மேற்பட்ட தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் சிங்கப்பூர் வந்துள்ளனர்.

அவர்களில் ஐந்து பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் இல்லாமல், தடுப்பூசி போட்டுகொண்டோருக்கான பயணம் மேலும் இரு நாடுகளுக்கு விரிவு

போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் அக்டோபர் 26 அன்று இந்த புள்ளிவிவரங்களை ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டார்.

ஆஸ்திரேலியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவை VTL திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதால், திட்டத்தின் கீழ் தினமும் 4,000 பயணிகள் சிங்கப்பூருக்குள் நுழையலாம் என்றும் அவர் கூறினார்.

இந்த எண்ணிக்கை சிங்கப்பூர் இதுவரை அனுமதித்ததை விட 1,000 அதிகம் என்று ஈஸ்வரன் கூறினார்.

மேலும் இந்த திட்டத்தை நீட்டிப்பது குறித்து முடிவெடுப்பதற்கு முன், திட்டத்தின் முன்னேற்றத்தை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணிப்போம், என்றார் அவர்.

டிரெய்லர் வாகனம், கார் விபத்து: சுமார் 5 கிமீ வரை போக்குவரத்து நெரிசல்