டிரெய்லர் வாகனம், கார் விபத்து: சுமார் 5 கிமீ வரை போக்குவரத்து நெரிசல்

Facebook / Beh Chia Lor - Singapore Road and Jeremy Sng

இன்று காலை (அக். 26) டிரெய்லர் வாகனம் மற்றும் காருக்கும் இடையே விபத்து ஏற்பட்டது. இதில் துவாஸ் நோக்கிச் செல்லும் பான் தீவு விரைவுச்சாலையில் (PIE) போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் இந்த விபத்தால் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

“சொந்த நாடுகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது மகிழ்ச்சி, இருப்பினும் சில சவால்கள் இருக்கின்றன” – வெளிநாட்டு ஊழியர்கள்

இன்று (அக். 26) காலை 11:03 மணியளவில் ஸ்டீவன்ஸ் ரோடு வெளியேறும் முன், துவாஸ் நோக்கி செல்லும் PIE விரைவுச்சாலையில் நடந்த விபத்து குறித்து தகவல் கொடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வழியாக வெளியானது, விரைவுச்சாலையின் மூன்று பாதைகளின் குறுக்கே டிரெய்லர் வாகனம் நிற்பதை காணமுடிகிறது.

நிலப் போக்குவரத்து ஆணையத்தின் (LTA) போக்குவரத்து குறித்த தகவலின்படி, இந்த விபத்து கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டர் வரை, அதாவது கல்லாங்-பயா லெபார் விரைவுச்சாலை (KPE) வெளியேறும் வழி வரை நெரிசலை ஏற்படுத்தியது.

மேலும், இரண்டு, மூன்று மற்றும் நான்காம் பாதைகளைத் தவிர்க்குமாறு சாலைப் பயணிகளுக்கு LTA அறிவுறுத்தியது.

இந்நிலையில், விபத்துக்குள்ளான அனைத்து வாகனங்களும் அகற்றப்பட்டுவிட்டதாகவும், விரைவுச்சாலையில் அனைத்துப் பாதைகளும் தற்போது திறக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து திரும்புபவர்கள் தனிமை உத்தரவை முதலாளியின் வசிப்பிடத்தில் நிறைவேற்ற அனுமதி