“சொந்த நாடுகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது மகிழ்ச்சி, இருப்பினும் சில சவால்கள் இருக்கின்றன” – வெளிநாட்டு ஊழியர்கள்

(Photo: Roslan Rahman / AFP/Getty Images)

சிங்கப்பூரில் வசிக்கும் மலேசியர்களும் இந்தோனேசியர்களும் தங்கள் சொந்த நாடுகளுக்கு பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ஆனால், அதற்கு நிர்வாக சவால்கள் இருப்பதால் மீண்டும் பயணத்தை முன்பதிவு செய்வதில் பலர் தயக்கம் காட்டுகின்றனர் என்று குடியிருப்பாளர்கள் சிஎன்ஏவிடம் கூறினர்.

குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து திரும்புபவர்கள் தனிமை உத்தரவை முதலாளியின் வசிப்பிடத்தில் நிறைவேற்ற அனுமதி

கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 23), கோவிட்-19 அபாயங்களின் அடிப்படையின்கீழ் நாடுகள் வகைப்படுத்தப்பட்டன, வகை IIIல் அந்த இரு நாடுகளும் இடம் பெற்றன.

இந்த வகை பட்டியலில் உள்ள நாடுகளுக்கு தனிமை கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன, பயணிகள் தங்களுடைய SHN தனிமை உத்தரவை பிரத்யேக வசதிக்குப் பதிலாக அவர்களது சொந்த தங்குமிடத்திலேயே நிறைவேற்ற வேண்டும்.

இந்த அறிவிப்பு வெளியான பிறகும் பலர் வீடு திரும்பும் முயற்சியில் ஈடுபடவில்லை, ஏனெனில் பெரிய நிர்வாக சவால்கள் இதில் உள்ளதாக கூறுகின்றனர்.

இந்தச் செய்தி வெளியானதும், இங்குள்ள மலேசிய சமூகம் மகிழ்ச்சியடைந்தது என்று “சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்கள்” (Malaysians Working in Singapore) என்ற டெலிகிராம் குழுமத்தின் உறுப்பினர் மிச்செல் இங் கூறினார்.

சில்லறை வியாபாரம், ஜுவல்லரி போன்ற இடங்களில் வேலை செய்வோர் மற்றும் தொழிலை நடத்துவோர் தனிமை காலத்தை எண்ணி சொந்த பகுதிகளுக்கு செல்ல யோசிக்கின்றனர்.

மேலும், அவர்கள் வீட்டில் இருந்து தங்களால் தொழில் செய்ய முடியாத சூழல் உள்ளதாகவும் கூறுகின்றனர்.

அவர்கள் தனிமைக்காக நீண்ட நாள் விடுமுறை எடுக்க முடியாத சூழல் குறித்தும் கவலை தெரிவிக்கின்றனர்.

வாட்ஸ்அப்பில் வலம் வரும் போலி செய்திகள்!