வாட்ஸ்அப்பில் வலம் வரும் போலி செய்திகள்!

Photo: Business Today

கோவிட்-19 தாெற்றுப் பரவல் ஏற்பட்ட நாளிலிருந்து, உண்மையில்லாத பல்வேறு போலி செய்திகளும், வதந்திகளும் வாட்ஸ்அப்பில் அதிகமாக வலம் வருகின்றன.

இதனால் பெரும்பாலும் மக்கள் உண்மையில்லாத பொய்யான செய்திகளை நம்பக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது.

ஆசியான் உச்சி மாநாட்டில் காணொளி மூலம் கலந்து கொள்ளும் சிங்கப்பூர் பிரதமர்!

உதாரணமாக, தற்போது காேவிட்-19 தாெற்றைக் கட்டுப்படுத்த போடப்படும் தடுப்பூசிகள் முறையாக பயன்ளிப்பதில்லை என்று வாட்ஸ்அப்பில் பரவி வரும் தவறான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாமென்று சிங்கப்பூரின் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தடுப்பூசி பயனளிக்கவில்லை என்ற அச்செய்திக்கு எதிராக, தற்போது கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 40 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசி போட்டு குணமடைந்தவர்கள் என்ற தகவலை எடுத்துரைத்தார்.

மேலும் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், யாரேனும் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தாலும், அவரும் தடுப்பூசி போடப்பட்டவராகத்தான் இருப்பார்.

இப்படி இருக்கும் போது கோவிட்-19 தடுப்பூசி முறையாக செயல்படவில்லை என்று எப்படி கூற முடியும். எனவே மக்கள் எந்தவாெரு விஷயத்தையும், அதன் உண்மையையும் நம்பகத்தன்மையையும் ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.

இதுபோன்ற சமூக வலைத்தளங்களில் பரவும் பொய்யான செய்திகள் மற்றும் வதந்திகள், மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும், பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

எனவே மக்கள் வாட்ஸ்அப்பில் வரும் சந்தேகத்திற்குரிய செய்திகளை நம்ப வேண்டாம் என்றார்.

இவ்வாறு வரும் பொய்யான தகவல்கள் மக்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல நேரிடும். எனவே மக்கள் இதுபோன்ற நிலையில் சிந்தித்து செயல்பட வேண்டும் என்றார்.

கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகத்தில் ஆடவர் கைது