கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகத்தில் ஆடவர் கைது

508 nabbed illegal moneylending and scams
Photo: Getty

ஆபத்தான ஆயுதம் ஏந்தி தானாக முன்வந்து காயப்படுத்திய சம்பவத்தில் 69 வயது முதியவர் கைது செய்யப்பட்டதாக நேற்று (அக்டோபர் 24) போலீசார் தெரிவித்தனர்.

மேக்பெர்சனில் (MacPherson) உள்ள பிளாக் 90 பிபிட் சாலையில் (Pipit Road) சனிக்கிழமை இரவு 11 மணியளவில் உதவி வேண்டி போலீசாருக்கு அழைப்பு வந்தது.

“காலவரையற்ற முடக்க நிலையிலும் இருக்க முடியாது, கட்டுப்பாடுகள் இன்றி விட்டுவிடவும் முடியாது” – பிரதமர் லீ

அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, ​​குடியிருப்பு பிரிவில் 51 வயதுடைய ஆடவர் ஒருவர் உடலில் வெட்டுக்காயங்கள் மற்றும் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் காணப்பட்டார்.

மேலும், 42 வயதான ஒருவர் விரலில் வெட்டு காயங்களுடன் காணப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

பின்னர், 51 வயதான ஆடவர் டான் டாக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவாக இருந்தார்.

இந்நிலையில், தாக்குதல் நடத்தியவர் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரிந்தவர் என்றும் அதிகாரிகள் வருவதற்கு முன்பே அவர் தப்பி ஓடிவிட்டார் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆபத்தான ஆயுதத்தால் தானாக முன்வந்து காயப்படுத்தியதாக அவர் மீது இன்று திங்கள்கிழமை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது இந்த தண்டனைகள் கலவையாகவும் வழங்கப்படலாம்.

“இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கடுமையான நடைமுறை இனி இல்லை”