“இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கடுமையான நடைமுறை இனி இல்லை”

Singapore
(Photo: TODAY)

இந்தியா, பங்களாதேஸ், மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் சிங்கப்பூரில் தரையிறங்குவதைத் தடுக்கும் கடுமையான விதிகள் இனி தேவையில்லை என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ குங் கூறினார்.

வரும் புதன்கிழமை முதல் அமலுக்கு வரும் இந்த மாற்றங்கள் சிங்கப்பூரின் மிக நெருக்கமான அண்டை நாடுகளான மலேசியா மற்றும் இந்தோனேஷியாவிலிருந்து பயணிகளுக்கும் பொருந்தும் என்று MOH கூறியுள்ளது.

சிங்கப்பூரை தொற்று அடிப்படையில் அதிக ஆபத்துள்ள நாடாக அறிவித்த மேலும் ஒரு நாடு

வகை பட்டியலில் II, III மற்றும் IV நாடுகளைச் சேர்ந்த அனைத்து பயணிகளும் இனி வருகையின்போது PCR சோதனை மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியமில்லை.

அவர்கள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு (SHN) முடிந்து வெளியேறும்போது மட்டுமே PCR சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

கம்போடியா, எகிப்து, ஹங்கேரி, இஸ்ரேல், மலேசியா, கத்தார், சீஷெல்ஸ், தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளுடன், மலேசியா மற்றும் இந்தோனேசியாவிலிருந்து வரும் பயணிகளும் “III வகை” நடவடிக்கைகளின்கீழ் உட்படுத்தப்படுவார்கள் என்று MOH தெரிவித்துள்ளது.

வகை III பிராந்தியங்களைச் சேர்ந்த பயணிகள் புதன்கிழமை முதல் 10 நாள் SHNஐ குறிப்பிட்ட இடம் அல்லது தங்குமிடத்தில் நிறைவேற்ற வேண்டும்.

இதில் பயணிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட விவரம் மற்றும் பயணம் மேற்கொண்ட விவரம் ஆகியவை ஏற்றுக்கொள்ளப்படாது.

இந்தியா, பங்களாதேஸ், மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு 14 நாள் பயணம் மேற்கொண்ட அனைத்து பயணிகளும் சிங்கப்பூர் வழியாக செல்ல அல்லது நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சகம் இன்று (அக்டோபர் 23) தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா உள்ளிட்ட 6 நாடுகளுக்கு பயண கட்டுப்பாட்டை நீக்கிய சிங்கப்பூர்