சிங்கப்பூரை தொற்று அடிப்படையில் அதிக ஆபத்துள்ள நாடாக அறிவித்த மேலும் ஒரு நாடு

ஜெர்மனி அரசின் சுகாதார நிறுவனமான ராபர்ட் கோச் நிறுவனம் (RKI) சிங்கப்பூரை தொற்று அடிப்படையில் அதிக ஆபத்துள்ள நாடாக வகைப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு நாளை அக்டோபர் 24, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் நடப்புக்கு வரும் என்றும் அது தெரிவித்துள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொண்ட புலம்பெயர்ந்த ஊழியர்கள் வெளியே செல்ல கூடுதல் இடம், நேரம்!

கடந்த செப். 8 முதல், சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனி இடையே தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கான சிறப்பு பயணம் (VTL) நடப்பில் உள்ளது.

முழு தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள், இரு நாடுகளுக்கும் இடையே பயணம் செய்ய தனிமைப்படுத்தல் அல்லது வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்ற தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சிங்கப்பூரை தொற்று அடிப்படையில் அதிக ஆபத்துள்ள நாடாக வகைப்படுத்தப்படும் என்று ஜெர்மனி அறிவித்துள்ளது.

இருப்பினும், முழு தடுப்பூசி போட்டுக்கொண்ட தனிநபர்கள் தனிமைப்படுத்தலின்றி ஜெர்மனி செல்ல முடியும் என்று சிங்கப்பூரில் உள்ள ஜெர்மன் தூதரகம் கூறியுள்ளது.

அதற்கு அவர்கள் அந்நாட்டிற்குள் நுழைவதற்கு முன்பு ஆன்லைனில் கட்டாய டிஜிட்டல் நுழைவு பதிவை (Digital entry registration) முதலில் சமர்ப்பிக்க வேண்டும்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் வசிப்பவர்களுக்கு தரமில்லா உணவு? – கேட்டரிங் மீது விசாரணை