வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் வசிப்பவர்களுக்கு தரமில்லா உணவு? – கேட்டரிங் மீது விசாரணை

In a Weixin article, migrant workers said they found insects in their catered food. (Photo: Weixin)

வெஸ்ட்லைட் ஜலான் துகாங் தங்கும் விடுதியில் வசிப்பவர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து கேட்டரிங் நிறுவனத்தை விசாரித்து வருவதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) வெள்ளிக்கிழமை (அக். 22) கூறியுள்ளது.

கடந்த வாரம் வெளியான ஆன்லைன் கட்டுரையில், பூச்சிகள் மற்றும் முடியுடன் இருக்கும் உணவுப் பொட்டலங்களை காட்டும் புகைப்படங்கள் வெளிவந்த பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

உலு பாண்டன் சமூக கிளப்பில் கார் மோதி விபத்து – 2 மருத்துவமனையில் அனுமதி

வெளியில் இருந்து வரும் உணவின் தரம் மற்றும் அதன் தயாரிப்பில் சுகாதாரமின்மை குறித்து விடுதியில் உள்ள ஊழியர்கள் புகார் அளித்தனர்.

செம்ப்கார்ப் மரைன் கடந்த வெள்ளியன்று, அந்நிறுவனத்தை கவனத்தில் எடுத்துக் கொண்டதாகவும், தங்கும் விடுதியில் வசிக்கும் அதன் ஊழியர்களிடம் மன்னிப்பும் கேட்டது.

சிஎன்ஏ கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, அந்த விடுதியில் வசிப்பவர்களிடம் இருந்து உணவு தரம் குறித்து எந்த புகார்களையும் பெறவில்லை என்று SFA கூறியது.

மே மாதத்தில், தங்கும் விடுதி நடத்துபவர்களுக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் முதலாளிகளுக்கும் உணவு பாதுகாப்பு ஆலோசனையை வழங்கியதாக SFA மனிதவள அமைச்சகத்துடன் (MOM) இணைந்து குறிப்பிட்டது.

உணவு வழங்கும் நிறுவனம் உட்பட SFAவால் உரிமம் பெற்ற அனைத்து உணவு நிறுவனங்களும் SFAன் ஒழுங்குமுறை தேவைகளுக்கு இணங்க வேண்டும்.

மேலும், ஒழுங்குமுறைகளை நிறுவனங்கள் பின்பற்றுகிறதா என்பதை உறுதி செய்வதற்காக SFA இந்த வழக்கமான ஆய்வுகளை நடத்துகிறது என்றும் அது கூறியுள்ளது.

தங்குவிடுதியில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு 5000 படுக்கைகள் ஒதுக்கீடு!