தடுப்பூசி போட்டுக்கொண்ட புலம்பெயர்ந்த ஊழியர்கள் வெளியே செல்ல கூடுதல் இடம், நேரம்!

Community visit programme for vaccinated migrant workers
(Photo: Tan See Leng / Facebook)

தடுப்பூசி போட்டுக்கொண்ட புலம்பெயர்ந்த ஊழியர்களுக்கான சமூக வருகை திட்டம், கூடுதல் இடம் மற்றும் நீட்டிக்கப்பட்ட நேரங்களுடன் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதாவது வாராந்திர அடிப்படையில், தடுப்பூசி போட்டுக்கொண்ட புலம்பெயர்ந்த ஊழியர்கள் கூடுதலாக விரைவில் வெளியே செல்ல முடியும் என்று மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் வசிப்பவர்களுக்கு தரமில்லா உணவு? – கேட்டரிங் மீது விசாரணை

முன்னர், பைலட் சமூக வருகை திட்டத்தின்கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட விடுதிகளில் இருந்து தடுப்பூசி போட்டுக்கொண்ட 500 ஊழியர்கள் வரை, கடந்த செப்டம்பர் 13 முதல் ஒவ்வொரு வாரமும் லிட்டில் இந்தியாவுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

அந்த ஒரு மாத பைலட் திட்டத்தின்போது, ​​30 தங்கும் விடுதிகளைச் சேர்ந்த சுமார் 700 புலம்பெயர்ந்த ஊழியர்கள் லிட்டில் இந்தியாவுக்கு ஆறு மணி நேரம் வருகை தந்தனர்.

அக்டோபர் 30 முதல்

இந்நிலையில், வரும் அக்டோபர் 30 முதல், தடுப்பூசி போட்டுக்கொண்ட புலம்பெயர்ந்த ஊழியர்கள் 3,000 பேர் வரை லிட்டில் இந்தியா மற்றும் கெய்லாங் செராய் ஆகிய இடங்களுக்கு வாரத்திற்கு 8 மணிநேரம் வரை செல்ல முடியும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னர் வழங்கிய அனுமதியில் இருந்து நேர்மறையான முடிவு மற்றும் நல்ல கருத்துகள் வந்ததன் காரணமாக தற்போது அது விரிவுப்படுத்தப்பட்டுள்ளதாக MOM கூறியது.

ஊழியர்கள் வருகைக்கு முன்னும் பின்னும் ஆன்டிஜென் விரைவு சோதனைகளை (ART) மேற்கொள்ள வேண்டும். அந்த சோதனையின்போது இதுவரை யாருக்கும் தொற்றுநோய் உறுதி செய்யபடவில்லை என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பொழுதுபோக்கு மையங்கள்

அக்டோபர் 30 முதல், தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்து புலம்பெயர்ந்த ஊழியர்களும் வாரத்திற்கு மூன்று முறை பொழுதுபோக்கு மையங்களுக்குச் செல்லலாம்.

இனிமேல் தடுப்பூசி போட்டுக்கொண்ட புலம்பெயர்ந்த ஊழியர்களுக்கு வருகைக்கு முன் ART சோதனை தேவைப்படாது.

தடுப்பூசி போடாதவர்கள்

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத புலம்பெயர்ந்த ஊழியர்கள் வாரத்திற்கு மூன்று முறை பொழுதுபோக்கு மையங்களுக்கு செல்ல முடியும்.

அதாவது அவர்கள் வழக்கமான சோதனை அல்லது வருகைக்கு முன் ART சோதனையில் “நெகடிவ்” முடிவுகளைப் பயன்படுத்தி மட்டுமே அங்கு செல்ல முடியும் என MOM கூறியுள்ளது.

உலு பாண்டன் சமூக கிளப்பில் கார் மோதி விபத்து – 2 மருத்துவமனையில் அனுமதி