இந்தியா உள்ளிட்ட 6 நாடுகளுக்கு பயண கட்டுப்பாட்டை நீக்கிய சிங்கப்பூர்!

(Photo: HCI)

முன்பு அனுமதி மறுக்கப்பட்ட ஆறு நாடுகளுக்குச் சென்ற பயணிகள் புதன்கிழமை முதல் சிங்கப்பூர் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய கோவிட் -19 சூழலை கருத்தில்கொண்டு எல்லை நடவடிக்கைகளை சிங்கப்பூர் தொடர்ந்து சரிசெய்து வருகிறது.

முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட/குணமடைந்த ஊழியர்கள் மட்டுமே மீண்டும் பணியிடம் திரும்ப அனுமதி

இந்தியா, பங்களாதேஸ், மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு 14 நாள் பயணம் மேற்கொண்ட அனைத்து பயணிகளும் சிங்கப்பூர் வழியாக செல்ல அல்லது நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சகம் இன்று (அக்டோபர் 23) தெரிவித்துள்ளது.

மேற்கண்ட நாடுகளில் உள்ள கோவிட்-19 நிலைமையை மறுஆய்வு செய்துள்ளதாக MOH அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகள் மிகவும் கடுமையான எல்லை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதாவது, 10 நாள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு (SHN) ஏற்பாடு செய்யப்பட்ட இட வசதியில் அந்த பயணிகள் நிறைவேற்ற வேண்டும்.

தடுப்பூசி போட்டுக்கொண்ட புலம்பெயர்ந்த ஊழியர்கள் வெளியே செல்ல கூடுதல் இடம், நேரம்!