“காலவரையற்ற முடக்க நிலையிலும் இருக்க முடியாது, கட்டுப்பாடுகள் இன்றி விட்டுவிடவும் முடியாது” – பிரதமர் லீ

Pic: Joshua Lee/Mothership

“காலவரையற்ற முடக்க நிலையிலும் இருக்க முடியாது, அதே போல வெறுமனே கட்டுப்பாடுகள் இன்றி விட்டுவிடவும் முடியாது” என்று பிரதமர் லீ ஹிசியன் லூங் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

“கோவிட்-19 உடன் பாதுகாப்பாக வாழ நாங்கள் இந்த பாதையில் பயணிக்க வேண்டும். முடிந்தவரை குறைவான உயிரிழப்புகளுடன் நாங்கள் அதனை அடைய விரும்புகிறோம்,” என்று திரு லீ கூறினார்.

மோட்டார் சைக்கிள் விபத்து: ஓட்டுநர், 14 வயதான சிறுமி மருத்துவமனையில் அனுமதி – காணொளி

மேலும், தொற்றுநோயைக் கையாளும் அமைச்சகங்களுக்கு இடையிலான பணிக்குழு அமைக்கும் நடைமுறைகள், அதை எவ்வாறு சிறப்பாகச் செய்வது என்பது குறித்த அரசாங்கத்தின் முடிவை பிரதிபலிக்கிறது, என்றும் அவர் கூறினார்.

கூடுதலான செயல்பாடுகளை பாதுகாப்பாக மீண்டும் தொடங்குவதற்குத் தயார்படுத்த வடிவமைக்கப்பட்ட பல புதிய நடவடிக்கைகளை பணிக்குழு சனிக்கிழமையன்று அறிவித்தது.

வாராந்திர தொற்று வளர்ச்சி விகிதம் ஒன்றுக்கு கீழே குறைந்தால் சில கோவிட் -19 நடவடிக்கைகளை எளிதாக்க முடியும் என்றும் பணிக்குழு அறிவித்தது.

பிரதமர் லீ தனது பதிவில் வாராந்திர தொற்று வளர்ச்சி விகிதத்தை பற்றி முன்னிலைப்படுத்தி கூறினார்.

அதாவது, சமூக அளவில் ஏற்படும் பாதிப்புகளின் கடந்த வாரத்திற்கும் அதன் முந்தைய வாரத்திற்கும் உள்ள வேறுபட்டு விகிதம் வாராந்திர தொற்று வளர்ச்சி விகிதம் என்று குறிப்பிட்டார். அது கண்காணிப்பட வேண்டிய எண் என்றும் அவர் கூறினார்.

இந்த விகிதம் ஒன்றுக்குக் கீழே குறைந்து, மருத்துவமனை மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு சூழல் நிலையானதாக இருந்தால், சில நடவடிக்கைகளை எளிதாக்க முடியும் என திரு லீ கூறினார்.

“இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கடுமையான நடைமுறை இனி இல்லை”