மோட்டார் சைக்கிள் விபத்து: ஓட்டுநர், 14 வயதான சிறுமி மருத்துவமனையில் அனுமதி – காணொளி

Screengrabs from video

சிங்கப்பூர் மத்திய விரைவுச்சாலையில் (CTE) நேற்று (அக்டோபர் 24) ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டியும் அவருடன் வந்த 14 வயது சிறுமியும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பிற்பகல் 1 மணியளவில் Braddell சாலைக்கு முன்பாக, AYE விரைவு சாலை நோக்கி செல்லும் CTE சாலையில் ஏற்பட்ட விபத்து குறித்து அவசர சேவைகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டன.

“இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கடுமையான நடைமுறை இனி இல்லை”

இந்த விபத்தில் மூன்று கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

இதில் 42 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் 14 வயது சிறுமி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்ததாக SPF தெரிவித்துள்ளது.

மேலும், ஒருவர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்றும், மற்றவர் Kandang Kerbau மருத்துவமனைக்கு (KKH) கொண்டு செல்லப்பட்டார் என்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) கூறியது.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

சிங்கப்பூரை தொற்று அடிப்படையில் அதிக ஆபத்துள்ள நாடாக அறிவித்த மேலும் ஒரு நாடு