ஆசியான் உச்சி மாநாட்டில் காணொளி மூலம் கலந்து கொள்ளும் சிங்கப்பூர் பிரதமர்!

(PHOTO: MCI)

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் 38- வது மற்றும் 39- வது ஆசியான் உச்சி மாநாடு (Association of Southeast Asian Nations- ‘ASEAN’) இன்று (26/10/2021) தொடங்குகிறது. இந்த மாநாட்டை நடத்துவதற்கான தலைமைப் பொறுப்பை புரூணை நாடு ஏற்றுள்ளது. ‘We Care, We Prepare, We Prosper’ என்ற தலைப்பில் மாநாடு நடைபெறுகிறது. மேலும், 24- வது ஆசியான் பிளஸ் த்ரீ உச்சி மாநாடு (24th ASEAN Plus Three Summit) மற்றும் 16- வது கிழக்காசிய உச்சி மாநாட்டின் (16th East Asia Summit) போது தலைவர்கள் சந்திப்பும் நடைபெறவிருக்கின்றன.

கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோயில் தீமிதித் திருவிழா!

இந்த மாநாட்டில் ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.

இந்த நிலையில், சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் நேற்று (25/10/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “38- வது மற்றும் 39- வது உச்சி மாநாட்டில் இன்று (26/10/2021) முதல் அக்டோபர் 28- ஆம் தேதி வரை நடைபெறவுள்ள, அனைத்து நிகழ்வுகளிலும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் காணொளி மூலம் கலந்துக் கொள்கிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘வீட்டை அலங்கரித்து வீடியோ எடுத்து ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடுங்கள்; பரிசுகளை வெல்லுங்கள்’- ‘Lisha’ அழைப்பு!

ஆசியான் உச்சி மாநாட்டில் பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள், பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, அமைதி, பொருளாதாரம், கொரோனா பரவல், கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள், பருவநிலை மாற்றம் உள்ளிட்டவைக் குறித்து தலைவர்கள் ஆலோசிக்க உள்ளதாக தகவல் கூறுகின்றன.

குறிப்பாக, மியான்மரில் நிலவும் சூழல், அரசியல் நிலவரம், ராணுவ ஆட்சி உள்ளிட்டவைக் குறித்தும் ஆலோசிக்கும் தலைவர்கள், இந்த விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவுகளை மாநாட்டில் எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.