‘வீட்டை அலங்கரித்து வீடியோ எடுத்து ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடுங்கள்; பரிசுகளை வெல்லுங்கள்’- ‘Lisha’ அழைப்பு!

Photo: Lisha Official Facebook Page

வரும் நவம்பர் 4- ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், சிங்கப்பூரில் உள்ள கடை வீதிகளில் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் புதிய ஆடைகள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்கள், பட்டாசு உள்ளிட்டவைகளை வாங்கி செல்கின்றன. இதனால் கடை வீதிகளில் விழாக்கோலம் பூண்டுள்ளது. அதேபோல், தீபாவளியை முன்னிட்டு முக்கிய சாலைகள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் புகைப்படம் எடுத்து மகிழ்கிறேன.

இந்தியா உள்ளிட்ட 6 நாடுகளுக்கு தனிமை விதிகள் மிகக் கடுமையாக மேற்கொள்ளப்படும்

தற்போது சிங்கப்பூரில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளப் போதிலும், பொதுமக்கள் அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தீபாவளியை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றன.

குறிப்பாக, சிங்கப்பூரில் உள்ள கடை வீதிகளில் முக்கிய கடை வீதியாகவும், அதிகளவு வர்த்தகம் நடைபெறும் கடை வீதியாக உள்ளது லிட்டில் இந்தியா. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், இக்கடை வீதிகளுக்கு வந்து பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். இங்கு கடையை நடத்தி வருபவர்கள் பெரும்பாலும் இந்தியர்கள் ஆவர்.

லிட்டில் இந்தியாவில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் இணைந்து ‘Lisha’ (LITTLE INDIA SHOPKEEPERS AND HERITAGE ASSOCIATION) என்ற அமைப்பைத் தொடங்கி, சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன. மேலும், இந்த அமைப்பு ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை வெகு விமர்சையாகக் கொண்டாடி வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டு தீபாவளியை முன்னிட்டு, லிட்டில் இந்தியா முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரித்துள்ள ‘Lisha’ அமைப்பு, பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டிகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளது. அதேபோல், நிகழ்ச்சிகளை பொதுமக்கள் வீட்டில் இருந்தே காணும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோயில் தீமிதித் திருவிழா!

அந்த வகையில், ‘Lisha’ அமைப்பு தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “இந்த தீபாவளிக்கு உங்கள் வீட்டை அலங்கரிக்கும் (Home Decorating) திறமையை வெளிப்படுத்துங்கள் மற்றும் கவர்ச்சிகரமான தீபாவளி பரிசுகளை வெல்லுங்கள்! உங்கள் வீட்டை அலங்கரித்து, அதை வீடியோவாகப் பதிவு செய்ய வேண்டும். வீடியோவானது 30 முதல் 40 வினாடிக்குள் இருக்க வேண்டும். பின்னர், வீடியோவை #BestDecoratedHome என்ற ஹேஷ்டேக்குடன் உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட வேண்டும். அத்துடன் @MediacorpOli968 மற்றும் @OfficialLishaSG டேக்கையும் குறிப்பிட வேண்டும். அதிக லைக்குகளை பெறும் வீடியோ வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. வரும் அக்டோபர் 29- ஆம் தேதிக்கு முன்னதாக விடியோவைச் சமர்ப்பிக்க வேண்டும். வெற்றி பெறும் நபருக்கு 200 சிங்கப்பூர் டாலர் மதிப்புள்ள கவர்ச்சிகரமான பரிசுகள் வழங்கப்படும். இது தொடர்பான, மேலும் விவரங்களுக்கு www.deepavalisg.com/eventlist/deepavali-best-decorated-home என்ற இணையதளத்தை அணுகலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.