இந்தியா உள்ளிட்ட 6 நாடுகளுக்கு தனிமை விதிகள் மிகக் கடுமையாக மேற்கொள்ளப்படும்

(Photo: India in Singapore/ Twitter)

இந்தியா உட்பட சில நாடுகளுக்கு பயண கட்டுப்பாடுகள் நேற்று முன்தினம் நீக்கப்பட்டன.

இருப்பினும், அந்த பயணிகளுக்கான தனிமை விதிகள் மிகக் கடுமையாக மேற்கொள்ளப்படும் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“சிங்கப்பூரில் வாரந்தோறும் தொற்று விகிதம் ஒன்றுக்குக் கீழே குறைந்தால் சில நடவடிக்கைகள் தளர்த்தப்படலாம்” – லாரன்ஸ் வோங்

அந்த அறிக்கையின்படி, இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகள் “வகை IV” எல்லை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

அதாவது அவர்கள் தங்கள் 10-நாள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை (SHN) நியமிக்கப்பட்ட SHN வசதிகளில் நிறைவேற்ற வேண்டும். அவர்கள் சொந்த இடங்களில் நிறைவேற்ற முடியாது.

இந்தியா, பங்களாதேஸ், மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு 14 நாள் பயணம் மேற்கொண்ட அனைத்து பயணிகளும் சிங்கப்பூர் வழியாக செல்ல அல்லது நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சகம் நேற்று முன்தினம் (அக்டோபர் 23) தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு வீடுகளின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வீட்டு பணிப்பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது,

ஆனால், அவர்கள் முழு தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட 6 நாடுகளுக்கு பயண கட்டுப்பாட்டை நீக்கிய சிங்கப்பூர்!