கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோயில் தீமிதித் திருவிழா!

Photo: Hindu Endowments Board Official Facebook Page

சிங்கப்பூரில் பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஒன்று சௌத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயில். உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இக்கோயில்களுக்கு அதிகளவில் வந்து செல்கின்றனர். இந்த கோயிலில் ஆண்டுதோறும் தீமிதித் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நேற்று (24/10/2021) அரசின் கொரோனா கட்டுப்பாடுகளுடன் தீமிதித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஸ்ரீ மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது.

சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 315 ஆக உயர்வு!

சுமார் 950 பேர் பூக்குழியில் இறங்குவதற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருந்தனர். முகக்கவசத்தை அணிந்தப்படி, பூக்குழியில் பக்தர்கள் இறங்கினர். சிங்கப்பூரில், தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்த போதிலும், முழுமையாகத் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் உள்ளிட்டோருக்கு கோயில் தீமிதித் திருவிழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. குறிப்பாக, விழாவில் நேரடியாக பங்கேற்க ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், குறைவான குறைவான பக்தர்களே விழாவில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவையொட்டி, கோயில் முழுவதும் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்டவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

“காலவரையற்ற முடக்க நிலையிலும் இருக்க முடியாது, கட்டுப்பாடுகள் இன்றி விட்டுவிடவும் முடியாது” – பிரதமர் லீ

தீமிதித் திருவிழாவை முதியவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் தங்கள் வீட்டில் இருந்தபடியே பாதுகாப்பாகக் காணும் வகையில் கோயில் நிர்வாகமும், இந்து அறக்கட்டளை வாரியமும் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. அதன்படி, தொலைக்காட்சி சேனல்கள், சமூக வலைத்தளங்கள், யூ-டியூப் பக்கங்களிலும் தீமிதித் திருவிழா நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.