சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 315 ஆக உயர்வு!

Photo: Ooi Boon Keong/TODAY)

சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (24/10/2021) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், “சிங்கப்பூரில் நேற்று (24/10/2021) மதியம் நிலவரப்படி, புதிதாக 3,383 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. உள்ளூர் அளவில் 3,375 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதில், 2,708 பேர் சமூக அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டு ஊழியர்கள் விடுதிகளில் 667 பேருக்கும் பாதிப்பு உறுதியாகியுள்ளது. வெளிநாட்டு பயணிகள் 8 பேருக்கும் நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,72,644 ஆக அதிகரித்துள்ளது.

மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் வரும் 2000க்கு மேற்பட்ட கார்களுக்கு நிறுத்துமிடம் ஒதுக்கீடு!

கொரோனா பாதிப்பால் மேலும் 15 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு 315 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,738 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றன. 278 பேருக்கு ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், 155 பேர் ஐ.சி.யூ.வில் சிகிச்சைப் பெற்று வருகின்றன.” இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பயணக் கட்டுப்பாட்டை நீக்கிய சிங்கப்பூர் அரசு’- மகிழ்ச்சி தெரிவித்துள்ள இந்திய தூதரகம்!

சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கை தொடர்ந்து 3,000- ஐ கடந்துள்ளது. அதேபோல், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரிழப்புகளும் அக்டோபர் மாதத்தில் அதிகளவில் பதிவாகியுள்ளது. நோய்த்தொற்றால் முதியவர்களே அதிகளவில் உயிரிழந்துள்ள நிலையில், தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதவர்கள், உடனடியாக தடுப்பூசியை செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.