வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு தொற்று உறுதி – முதற்கட்ட பரிசோதனையில் Omicron என தகவல்

Photo: Changi Airport

சிங்கப்பூரில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 5) நிலவரப்படி, புதிதாக 13 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும் வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது, இவருக்கு Omicron மாறுபாட்டிற்கான வாய்ப்பு இருப்பதாக முதற்கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக அமைச்சகம் கூறியுள்ளது.

விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்: கட்டுப்பாடு கூடுதல் தளர்வால் வெளியில் சென்று மகிழ்ந்தனர்!

37 வயதான சிங்கப்பூர் நிரந்தரவாசியான அவர், கடந்த டிசம்பர் 1 அன்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் தென்னாப்பிரிக்காவிலிருந்து சிங்கப்பூர் வந்தடைந்தார்.

அவர் கடந்த வாரம் அந்த வகை கிருமி அடையாளம் காணப்பட்ட இருவருடன் அதே விமானத்தில் பயணம் செய்துள்ளார். இருவரின் உறுதிப்படுத்தும் சோதனை முடிவுகள் இன்னும் நிலுவையில் உள்ளன என்றும் MOH தெரிவித்துள்ளது.

நவம்பர் 29 அன்று ஜோகன்னஸ்பர்க்கில் அந்த நபரின் புறப்படுவதற்கு முந்தைய சோதனையில் அவருக்கு COVID-19 தொற்று இல்லை.

சிங்கப்பூர் வந்தடைந்தவுடன் அவர் SHN தனிமைக்காக பிரத்யேக வசதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அதன் பின்னர் கடந்த டிசம்பர் 1 மற்றும் 3 ஆம் தேதிகளில் அவரது PCR சோதனைகள் நெகடிவ் என வந்ததாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து, கடந்த 4ஆம் தேதி அவருக்கு காய்ச்சல், தொண்டையில் வலி ஏற்பட்டது, பின்னர் முதற்கட்ட பரிசோதனையில் அவருக்கு Omicron வகை இருப்பது தெரியவந்தது.

கட்டுமானம், கடல் துறைகளில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் இந்த திட்டத்தின் மூலம் சிங்கப்பூர் வரலாம்!