கட்டுமானம், கடல் துறைகளில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் இந்த திட்டத்தின் மூலம் சிங்கப்பூர் வரலாம்!

new-portal-enables-lower-wage workers
Pic: AFP

கட்டுமானம், கடல், செயல்முறை (CMP) துறைகளில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் வசிக்கும் ஊழியர்கள் தற்போதைய தொழில்துறை முயற்சிகள் மூலம் மட்டுமே சிங்கப்பூருக்குள் நுழைய முடியும்.

ஒர்க் பாஸ் பொதுப்பாதை திட்டம்

எடுத்துக்காட்டாக, புறப்படும் நாட்டின் சோதனை (upstream testing) மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட திட்டங்கள் அல்லது ஒர்க் பாஸ் ஹோல்டர் ஜெனரல் லேன் என்னும் பொதுப்பாதை திட்டத்தின் வழியாக சிங்கப்பூருக்குள் நுழைய முடியும் என்று மனிதவள அமைச்சகம் கூறியது.

இந்த பாதைகளின் கீழ் சிங்கப்பூருக்குள் நுழையும் ஊழியர்களின் எண்ணிக்கை தொழில்துறையில் உள்ள தேவைகளை பூர்த்தி செய்வதாக அமைச்சகம் கூறியது.

இதன் மூலம் அனுமதிக்கப்படும் ஊழியர்கள், தடுப்பூசி சான்றையும் மருத்துவ பரிசோதனை சான்றையும் சரிபார்ப்புக்காக சமர்ப்பிக்க வேண்டும்.

MOMஇன் கூற்றுப்படி, புதிய CMP ஊழியர்களுக்கு ஆன்போர்டிங் திட்டம் என்பது ஏற்கனவே உள்ள தேவையாகும், இதில் தடுப்பூசி சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை மற்றும் அந்த திட்டத்தில் குடியேறுதல் ஆகியவை அடங்கும்.

சிங்கப்பூர் to திருச்சி வந்த 140 பேர்: “வீட்டை விட்டு வெளியே செல்ல கூடாது” – கண்காணிக்கும் அதிகாரிகள்

முன்னதாக ஒப்புதல் பெற்ற ஊழியர்கள்

VTL வழியாக சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு டிச. 4 இரவு 11.59 மணிக்கு முன்னதாக ஒப்புதல் பெற்ற ஊழியர்கள், VTL வழி சிங்கப்பூர் வர அனுமதிக்கப்படுவார்கள் என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இவர்கள் வருகையின்போது கோவிட்-19 PCR சோதனை மேற்கொள்ள வேண்டும் மற்றும் முடிவுகளுக்காக காத்திருக்கும்போது சுயமாக தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும், இதில் நெகடிவ் சோதனை முடிவை பெற்றவர்கள், ஐந்து நாள் ஆன்-போர்டிங் திட்டத்தின் மூலம் செல்வார்கள். மேலும் விவரங்கள் முதலாளிகளுக்குத் தெரிவிக்கப்படும் என்று MOM கூறியது.

ஒர்க் பாஸ் பொதுப்பாதை திட்டம் என்றால் என்ன?

வொர்க் பாஸ் ஹோல்டர் ஜெனரல் லேன் (WPHL) என்பது மனிதவள அமைச்சகம் (“அனுமதி வைத்திருப்பவர்கள்”) வழங்கிய அனுமதிகளுடன் வெளிநாட்டினரின் நுழைவை எளிதாக்கும் ஒரு பாதுகாப்பான பயணப் பாதையாகும்.

அனைத்து பாஸ் வைத்திருப்பவர்களும் சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு அனுமதி பெற வேண்டும்.

இருப்பினும், மலேசியாவில் இருந்து தரை அல்லது கடல் வழியாக வரும் அத்தியாவசிய சேவைகள் அல்லது பொருட்களை (எ.கா. லாரி டிரைவர்கள் அல்லது காய்கறி சப்ளை ட்ரக்கர்ஸ்) அனுப்பும் பாஸ் வைத்திருப்பவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

சிங்கப்பூரில் இருந்து மதுரை, திருச்சி வந்தவர்களுக்கு தொற்று உறுதி – தொற்று ஆபத்து நாடு என்பதால் தீவிர சோதனை