சிங்கப்பூரில் இருந்து மதுரை, திருச்சி வந்தவர்களுக்கு தொற்று உறுதி – தொற்று ஆபத்து நாடு என்பதால் தீவிர சோதனை

who came to Chennai from Singapore was arrested

வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த நான்கு பயணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர்களுக்கு உருமாறிய ஓமைக்ரான் வகை பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

சிங்கப்பூரில் இருந்து சிவகங்கைக்கு வந்த 23 பேர் – கடும் வீட்டு கண்காணிப்பு

தென் ஆப்ரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட இந்த ஒமைக்ரான் வகை பல்வேறு உலக நாடுகளில் பரவியுள்ளது.

மேலும், இந்த ஒமைக்ரான் வைரஸ் காரணமாக 12 நாடுகளுக்கு கடுமையான சோதனை நடைமுறையை இந்தியா அறிவித்துள்ளது, அதில் சிங்கப்பூரும் அடங்கும்.

சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஹாங்காங், சீனா, இஸ்ரேல், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, பிரேசில், வங்கதேசம், மொரீசியஸ் உட்பட 12 நாடுகள் அந்த பட்டியலில் அடங்கும்.

பாதிப்பு விவரங்கள்

பிரிட்டனில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த 9 வயது சிறுமி, அமெரிக்காவில் இருந்து வருகை தந்த 32 வயது பெண்ணுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த 56 வயதான ஒருவருக்கும், சிங்கப்பூரில் இருந்து மதுரை வந்த 43 வயது நபருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, இவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பிரிட்டனில் இருந்து சென்னை வந்த 25 வயதான நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்களுக்கு ஒமைக்ரான் வகை பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய, பரிசோதனைக்கு சென்னை, புனே, பெங்களூரு ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

S Pass, ஒர்க் பெர்மிட் உடைய கட்டுமானம், கடல் துறையில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு VTL விண்ணப்ப அனுமதி இல்லை