சட்டவிரோதமாக இறைச்சி, கடலுணவை இறக்குமதி செய்த நிறுவனத்திற்கு அபராதம்!

Photo: Singapore Food Agency

உரிமம் பெறாத குளிர்பதனக் கிடங்கைச் செயல்படுத்தி வந்ததற்காகவும், தென் கொரியாவிலிருந்து வகைப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் கடலுணவை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததற்காகவும் கொரிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் ‘Koryo Trading’ என்ற நிறுவனத்திற்கு நீதிமன்றம் நேற்று (08/10/2021) 30,000 சிங்கப்பூர் டாலரை அபராதமாக விதித்து உத்தரவிட்டுள்ளது.

கொரோனா நிலவரம் குறித்து நாளை உரையாற்றவிருக்கும் பிரதமர் லீ சியன் லூங்!

இது குறித்து சிங்கப்பூர் உணவு அமைப்பு (Singapore Food Agency- ‘SFA’) கூறுகையில், “கடந்த பிப்ரவரி மாதம் சிங்கப்பூர் உணவு அமைப்பு அதிகாரிகள்,’ Koryo Trading’ நிறுவனத்தின் வளாகத்தை ஆய்வு செய்தனர். அப்போது, உரிமம் பெறாத குளிர்பதனக் கிடங்கில் சுமார் 4,600 கிலோ எடையுள்ள இறைச்சியையும், கடலுணவையும் கண்டுபிடித்தனர். அதைத் தொடர்ந்து, அதிகாரிகள் நடத்திய விசாரணையின்போது, தென் கொரியாவிலிருந்து சட்டவிரோதமாக இறைச்சிப் பொருட்களை இறக்குமதி செய்தது தெரிய வந்தது.

மேலும், ‘Koryo Trading’ நிறுவனம் தனித்தனியாக தென் கொரியாவில் இருந்து சுமார் 72 கிலோ எடையுள்ள ‘Puffer fish’ மற்றும் ‘Puffer fish products’ உள்ளிட்டவையை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது. அந்த பொருட்கள் அனைத்தையும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

“நிச்சயமாக ஒரு நல்ல எதிர்காலத்தை நம்மால் உருவாக்க முடியும்”- அமைச்சர் எஸ்.ஈஸ்வரன்!

இறைச்சி மற்றும் கடல் உணவுப் பொருட்களுக்கான குளிர்பதனக் கிடங்கு உரிய உரிமத்துடன் மட்டுமே இயங்க முடியும். அதை, அவ்வப்போது சிங்கப்பூர் உணவு அமைப்பு அதிகாரிகளால் சோதிக்கப்படும். உரிமம் இல்லாத குளிர்பதனக் கிடங்கில் இறைச்சி மற்றும் கடலுணவுகளை சட்டவிரோதமாக சேமித்து வைப்பது உணவு பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்துகிறது.” இவ்வாறு சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக இறைச்சி மற்றும் கடலுணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் குற்றத்திற்கு 50,000 சிங்கப்பூர் டாலர் வரை அபராதம் விதிக்கப்படலாம் (அல்லது) இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் (அல்லது) அபராதம் மற்றும் சிறைத்தண்டனை ஆகிய இரண்டும் விதிக்கப்படலாம்.