சிங்கப்பூரில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு டிச. 1 முதல் கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்கள்!

ANI File Photo

“கிருமி தொற்று ஆபத்து அதிகம்” உள்ள இடங்களின் பட்டியலை இந்தியா வெளியிட்டுள்ளது, அதில் சிங்கப்பூரும் இடம் பிடித்துள்ளது.

அதன் காரணமாக சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளுக்கு வருகையின் போது கூடுதல் COVID-19 நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் “கிருமி தொற்று ஆபத்து அதிகம்” உள்ள பட்டியலில் இடம் பிடித்த “சிங்கப்பூர்”

வழிகாட்டுதல்கள்

இந்த டிசம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும் வழிகாட்டுதல்களில், பயணத்திற்கு முன் 14 நாட்கள் பயண விவரங்களை பயணிகள் சமர்ப்பிக்க வேண்டும்.

அதோடு, நெகடிவ் RT-PCR அறிக்கையையும் பயணிகள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இந்தியாவின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் கூறியுள்ளது.

ஆபத்து பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வரும் அல்லது செல்லும் பயணிகள், அவர்கள் வருகைக்குப் பின் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள், அதில் “நெகடிவ்” சோதனை முடிவு இருந்தால் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

மேலும், “பாசிட்டிவ்” சோதனை முடிவு இருந்தால் கடுமையான தனிமைப்படுத்தல் நெறிமுறைகளுக்கு பயணிகள் உட்படுத்தப்படுவார்கள் என்று அமைச்சகம் அதன் வழிகாட்டுதல்களில் தெரிவித்துள்ளது.

அந்த பட்டியலிலுள்ள இடங்களிலிருந்து வரும் பயணிகள், வருகை தரும் இடத்தில் சுயமாக கட்டணம் செலுத்தி கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு கடுமையாகும் சோதனை – டிசம்பர் 3 முதல் புதிய நடைமுறை

மேலும், விமான நிலையத்தை விட்டு வெளியேறும் முன் அல்லது இணைப்பு விமானத்தில் செல்வதற்கு முன் முடிவுகளுக்காக பயணிகள் காத்திருக்க வேண்டும்.

“நெகட்டிவ்” என்று முடிவு பெற்றவர்கள், ஏழு நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள், பின்னர் எட்டாவது நாளில் மீண்டும் பரிசோதனை செய்யப்படும்.

அந்த இரண்டாவது சோதனையின் முடிவு “நெகட்டிவ்” என இருந்தால், பயணிகள் மேலும் ஏழு நாட்களுக்கு தங்கள் உடல்நிலையை கண்காணிக்க வேண்டும்.

ஆனால், “பாசிட்டிவ்” முடிவு பெறும் பயணிகளின் மாதிரிகள் மரபணு சோதனைக்கு அனுப்பப்படும், மேலும் வேறொரு தனிமைப்படுத்தும் வசதியில் இவர்கள் மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்படும்.

சென்னை-சிங்கப்பூர் இடையே திட்டமிட்டபடி விமான சேவை வழங்கும் “இண்டிகோ”