இந்தியா, சிங்கப்பூர் இடையே விமான சேவையை வழங்கி வரும் விமான நிறுவனங்களின் விவரங்கள்!

Photo: Singapore Airlines Official Facebook Page

உலகளவில் கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்துள்ளதாலும், கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டவர்களின் விகிதம் அதிகரித்துள்ளதாலும் தற்போது சர்வதேச விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, விமான நிறுவனங்கள் சர்வதேச விமான போக்குவரத்தைத் தொடங்கியுள்ளனர். தற்போது கோடைக்காலம் என்பதால் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சிங்கப்பூர் நிதித்துறையில் 9400 புதிய வேலைவாய்ப்புகள் – நான்கு மடங்கு வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளதாக MAS தலைவர் ரவி மேனன் பேச்சு

இதன் காரணமாக, கொரோனா காரணமாக, கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த விமான நிறுவனங்கள் மெல்ல மெல்ல மீண்டு வருகின்றனர்.

குறிப்பாக, இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் தினசரி விமானங்களை விமான நிறுவனங்கள் இயக்கி வருகின்றனர். அது குறித்து விரிவாகப் பார்ப்போம்!

ஊழியர் ஒருவரை அடித்து தாடையை உடைத்த இந்திய வம்சாவளி ஊழியருக்கு சிறை

இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே விமான சேவையை வழங்கி வரும் விமான நிறுவனங்களின் பட்டியல்!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், இண்டிகோ ஏர்லைன்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம், ஸ்கூட், ஏர் இந்தியா, விஸ்தாரா, ஏர் ஏசியா, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே தொடர்ந்து விமான சேவையை வழங்கி வருகின்றன.

Work permit அனுமதி காலாவதி… “வேலை வேண்டும்” என்ற நோக்கில் கட்டுமான தளத்திற்குள் அத்துமீறி நுழைந்த வெளிநாட்டு ஊழியருக்கு சிறை

குறிப்பாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் திருச்சி, மதுரையில் இருந்தும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் திருச்சியில் இருந்தும், ஸ்கூட் நிறுவனம் திருச்சி, கோவையில் இருந்தும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் சென்னையில் இருந்தும் இரு மார்க்கத்திலும் விமான சேவையை வழங்கி வருகின்றனர்.

இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://www.srilankan.com/en_uk/in என்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இணையதளப் பக்கத்திலும், https://www.airindiaexpress.in/en என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் இணையதள பக்கத்திலும், https://www.flyscoot.com/en/ என்ற ஸ்கூட் நிறுவனத்தின் இணையதளப் பக்கத்திலும் அறிந்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.