இன்று சிங்கப்பூர் வருகிறார் இந்திய ராணுவ தளபதி!

Photo: Wikipedia

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே (Chief of Army Staff General MM Naravane) மூன்று நாள் அரசுமுறை பயணமாக இன்று (04/04/2022) சிங்கப்பூருக்கு வருகிறார்.

இந்தியாவின் தூய்மைக்கு மானியம் வழங்கும் சிங்கப்பூர் DBS – பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்த இந்தியாவுடன் சிங்கப்பூர்

இது தொடர்பாக, இந்திய ராணுவம் (India Army) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி இன்று (04/04/2022) முதல் வரும் ஏப்ரல் 6- ஆம் தேதி வரை சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது சிங்கப்பூரின் மூத்த இராணுவ அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

சிங்கப்பூரில் உள்ள பல ராணுவ நிலைகளையும் ராணுவத் தளபதி பார்வையிடுவார். குறிப்பாக, சாங்கி கடற்படைத் தளம் (Changi Naval Base), இன்போ பியூஷன் மையம் (Info Fusion Centre), பிராந்திய எச்ஏடிஆர் ஒத்துழைப்பு மையம் (Regional HADR Coordination Centre) உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிடுகிறார்.

ஜெர்மனிக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர்!

சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் மூத்த தலைவர்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ள இந்திய ராணுவ தளபதி, இந்தியா- சிங்கப்பூர் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.