இடிந்து விழுந்த தொங்கு பாலம்… 140 க்கும் மேற்பட்டோர் பலி – பதைபதைக்கும் CCTV காட்சி

india-bridge-collapse death cctv

இந்தியா: குஜராத்தின் மேற்கு மாநிலமான மோர்பியில் கடந்த அக்டோபர் 31, ஞாயிற்றுக்கிழமை மாலை தொங்கு பாலம் ஒன்று ஆற்றில் உடைந்து விழுந்தது.

இந்த பாலம் பழுது சரிசெய்யப்பட்டு ஒரு வாரத்திற்கு முன் அதாவது அக்., 26 ஆம் தேதி தான் திறக்கப்பட்டது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பாலத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிளப்பில் இருந்த பெண்களை தொட்டு சீண்டியதாக இளைஞர் கைது (Video)

இந்த பாலம் 1.5 மீ அகலம், 230 மீ நீளம் உடையது. பிரிட்டிஷ் ஆட்சியின் போது 1877ஆம் ஆண்டு இது கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்தில் இறப்பு எண்ணிக்கை 134 எனவும், பின்னர் 141 ஆக உயர்ந்துள்ளதாகவும் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன, இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வ நிலவரப்படி, இறந்தவர்களில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் என சொல்லப்படுகிறது.

சிலர் ஐந்து வயதுக்குட்பட்டவர்கள் என்றும் வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

அதிநவீன புதிய தெம்பனிஸ் நார்த் பேருந்து முனையம்: நவ.27 திறப்பு – சிறப்பு அம்சங்கள் என்ன?