அதிநவீன புதிய தெம்பனிஸ் நார்த் பேருந்து முனையம்: நவ.27 திறப்பு – சிறப்பு அம்சங்கள் என்ன?

Tampines North bus interchange to open on Nov 27 with family-friendly and inclusive facilities
Photo: LTA

சிங்கப்பூர்: புதிய தெம்பனிஸ் நார்த் (Tampines North) பேருந்து முனையம் வரும் நவம்பர் 27 அன்று திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

​​அமைதியான பராமரிப்பு அறை போன்ற குடும்பத்திற்கு உகந்த மற்றும் அனைவரையும் உள்ளடக்கும் வசதிகளை அங்கு எதிர்பார்க்கலாம் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது.

இந்த முனையம், SBS ட்ரான்சிட் நிறுவனம் மூலம் நிர்வகிக்கப்படும். இது Tampines Street 62 இல் அமைந்துள்ளது என்று LTA தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் இவர்களுக்கு சம்பள உயர்வு – ஜன.1 முதல் அமல்

சிறப்புகள்

  • அனைத்து நுழைவாயில்களிலும் தடையற்ற அணுகல்
  • ஒவ்வொரு போர்டிங் பெர்த்திலும் இருக்கைகளுடன் பிரத்யேக முன்னுரிமை வரிசை இடங்கள்
  • சக்கர நாற்காலியில் செல்லக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறைகள்
  • உடை மாற்றும் அறை
  • பெற்றோருக்கு தனி குழந்தை பராமரிப்பு அறை
  • இந்த வசதிகள் தொடாமலே இயங்கும் ஆட்டோ-ஸ்லைடிங் என்னும் தானியங்கு கதவுகளுடன் பொருத்தப்பட்டுள்ளன.

முனைய பணியாளர்களுக்கு…

  • பிரத்யேக கழிப்பறைகள்,
  • துப்புரவு பணியாளர் அறை
  • பணியாளர் ஓய்வறை

ஊழியர்களுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை… சிக்கிய நிறுவனங்கள் – 12 வேலை நிறுத்த உத்தரவுகள், 232 அபராதங்கள்