குஜராத் பாலம் இடிந்து விழுந்து 130க்கும் மேற்பட்டோர் மரணம்: இரங்கல் தெரிவித்த சிங்கப்பூர் பிரதமர் லீ

india-bridge-collapse death cctv

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, சிங்கப்பூர் பிரதமர், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று (நவம்பர் 1) இரங்கல் கடிதம் எழுதியுள்ளார்.

மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “குஜராத் மாநிலத்தில் மோர்பி பாலம் இடிந்து விழுந்ததையும், உயிரிழப்பு ஏற்பட்டதையும் அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்” என்றார்.

சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய வம்சாவளி ஆடவர்: குற்றமற்றவர் என அதிரடி தீர்ப்பு

“சிங்கப்பூர் அரசின் சார்பாக, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார் திரு.லீ.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிராத்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாலம் இடிந்து விழும்போது அதில் சுமார் 200 பேர் இருந்திருக்கலாம் என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இடிந்து விழுந்த தொங்கு பாலம்… 140 க்கும் மேற்பட்டோர் பலி – பதைபதைக்கும் CCTV காட்சி

இனி வரிசையில் நிற்கவேண்டியதில்லை: மருத்துவமனைகளில் முகங்களை ஸ்கேன் செய்யும் புதிய முறை