இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் தினசரி மற்றும் நேரடி விமான சேவைகளை வழங்கி வருகிறது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம்.
இந்தியாவில் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி, கொல்கத்தா, டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் தினசரி மற்றும் நேரடி விமான சேவைகளை வழங்கி வருகிறது.
மேலே குறிப்பிட்டுள்ள இந்திய நகரங்கள் மற்றும் சிங்கப்பூர் இடையேயான விமான சேவைகளுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தானில் அவசரமாக தரையிறங்கிய இந்திய விமானம்!
விமான பயண டிக்கெட் முன்பதிவு, விமான பயண அட்டவணை மற்றும் ஆஃபர் உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.singaporeair.com/en_UK/in/home#/book/bookflight என்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் (Singapore Airlines) அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
அதேபோல், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு சொந்தமான கூட் நிறுவனமும் (Flyscoot), திருச்சி, கோவை, விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் சிங்கப்பூருக்கு விமான சேவைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.