இந்தியாவின் சென்னை உள்பட எட்டு நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு ‘VTL’ விமான சேவையை வழங்கி வரும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம்!

Photo: Singapore Airlines Official Facebook Page

உலகம் முழுவதும் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதாலும், கொரோனா தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்களின் விகிதம் அதிகரித்துள்ளதாலும், சர்வதேச விமான போக்குவரத்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது.

ஊழியர்களில் 75 சதவீதம் பேர் தங்கள் வேலையிடங்களுக்கு திரும்ப அனுமதி!

அந்த வகையில், இந்தியாவின் சென்னை, கோவை, திருச்சி, ஹைதராபாத், அகமதாபாத், கொச்சி, டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, அமிர்தசரஸ், உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு VTL மற்றும் Non- VTL விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட், இண்டிகோ உள்ளிட்ட விமான நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் சென்னை, டெல்லி, கொல்கத்தா, கொச்சி, அகமதாபாத், ஹைதராபாத், பெங்களூரு, மும்பை ஆகிய எட்டு நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு தினசரி VTL விமான சேவையை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடர்ந்து வழங்கி வருகிறது. அதேபோல், சிங்கப்பூரில் இருந்தும் இந்திய நகரங்களுக்கு விமானங்களை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் இயக்கி வருகிறது. இவை அனைத்தும் நேரடி விமான சேவை ஆகும். குறிப்பாக, பெங்களூரு, டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சிங்கப்பூருக்கு ஒன்றும் மேற்பட்ட VTL விமானங்களை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடர்ந்து இயக்கி வருகிறது.

சிங்கப்பூரின் பயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்; இந்திய பயணிகள் மகிழ்ச்சி!

இந்த வழித்தடங்களின் விமான சேவைக்கான மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘VTL’ விமான சேவை என்பதால், இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் செல்லும் பயணிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை என்பதால், ‘VTL’ விமான சேவையில் பயணிக்க பயணிகள் ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.singaporeair.com/en_UK/in/home#/book/bookflight என்ற இணையதள பக்கத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.