சிங்கப்பூர் அமைச்சர்களைச் சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்!

Photo: High Commission Of India In Singapore

சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், சிங்கப்பூரின் மூத்த அமைச்சர்களை தனித்தனியே சந்தித்துப் பேசினார்.

கொழும்பு மற்றும் சிங்கப்பூர் இடையே தினசரி விமான சேவை- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவிப்பு!

இந்த சந்திப்பின் போது, கொரோனா பரவல், கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள், பொருளாதாரம், இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துதல், பொருளாதாரம், சிங்கப்பூர்- இந்தியா விமான சேவை உள்ளிட்டவைக் குறித்து சிங்கப்பூர் அமைச்சர்களுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “சிங்கப்பூர் மூத்த அமைச்சர் மற்றும் சமூக ஒருங்கிணைப்புகளுக்கான அமைச்சர் தர்மன் சண்முகரத்தினத்தை சந்தித்ததில் மகிழ்ச்சி. சர்வதேச பொருளாதார நிலை குறித்து விவாதித்தோம்.

மரப்பலகைப் பெட்டிக்குள் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள்… பறிமுதல் செய்த ‘ICA’ அதிகாரிகள்!

சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சரைச் சந்திப்பதில் எப்போதும் போல் மகிழ்ச்சி. சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சண்முகத்தைச் சந்தித்தேன். எங்கள் கூட்டாண்மையை வலுப்படுத்துவது குறித்த அவரது கருத்துகளுக்கு பாராட்டுகள்” என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் சிங்கப்பூர் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.